பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

30june_2

527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடமான பண்டார் மக்கோத்தா, செராஸில் பள்ளிக்கூடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று 30/06/2017 காலை 08.00 மணிக்கு துவங்கியது. சிலாங்கூரில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம.இ.காவின் தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ SK தேவமணி மற்றும் மத்திய கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இதற்கு முன் சிறப்பு இறை வணக்கத்துடன் பூமி பூஜை நடந்தது. 

24 வகுப்பறைகளையும் மற்ற ஏனைய வசதிகளுடன் கட்டப்படும் இந்த தமிழ்ப்பள்ளிக்கூடம் சுமார் 21 மில்லியன் செலவில் கட்டப்படுகிறது. ம.இ.கா இடம்பெற்றுள்ள தேசிய முன்னனி கூட்டணி அரசானது ஏழு புதிய தமிழ்ப் பள்ளிகளை கட்டவிருக்கிறது. அதில் முன்னமே பாயா பெசார் தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு இயங்கத் துவங்கிவிட்டது. அதனை தொடர்ந்து தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி, பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளி மற்றூம் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு வருகின்றன. மேலும் ஹீவுட் தமிழ்ப் பள்ளிக்கு அனுமதி கடிதம் வழங்கட்டுவிட்டது. இந்த வரிசையில் பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளிக்கு இன்று  30/06/2017 அடிக்கல் நாட்டப்பட்டிருகிறது.

[vsw id=”qxH-yvrr_aM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]


30june_1 30june_3

30june_4 30june_5 30june_6