காலிட் வழியில் செயல்படுவேன் : புதிய முதல் அமைச்சர் அஸ்மின்

காலிட் வழியில் செயல்படுவேன் : புதிய முதல் அமைச்சர் அஸ்மின்

Azim1 Azim2

சிலாங்கூர் மாநிலத்தின் புதிய முதல் அமைச்சராக புகிட் அந்தாரபங்க்ஸா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி இன்று 23/09/2014 காலை 10.40 மணி அளவில் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதை தொடர்ந்து ஷா ஆலம் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டத்தோ முகமது ஜமிதின் முகமது தியா சாட்சியாக உறுதிமொழியில் கையெழுத்திட்டார்.

15வது முதல் மந்திரியாக பதி ஏற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மின் தான் பி.கே.ஆர் கட்சியின் ஆலோசகர்  டத்தோ அன்வர் தன்னை ரிமோட் கண்ட்ரோல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்றும் தான் அரசியல் சாசனப்படியும் மக்கள் நலனுக்காகவுமே செயல்படப் போவதுமாக தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில புதிய ஆட்ரி மன்ற உறுப்பினர் வருகிற வெள்ளிக்கிழமை 26/09/2014 அன்று பதவி ஏற்பார்கள் என்றும் தெரிவித்தார். புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் யார் யார் என்பதி வியாழன் அன்று முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். பழைய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் இதில் இடம்பெறுவார்களா என செய்தியாளர்கள் வினவியதற்கு பக்கத்தான் ராயாவுடன் கலந்தாலோசித்து இது பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். பி.கே.ஆர். கட்சியின் ஆலோசகர் அன்வர் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சிலாங்கூர் டி.ஏ.பி மற்றும் பாஸ் கட்சிகள் புதிய முதலமைச்சராக அஸ்மின் நியமிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு அவருக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக சர்ச்சையில் இருந்த சிலாங்கூர் முதலமைச்சர் பற்றி பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

நீர் சீரமைப்பு ஒப்பந்தம் மட்டுமல்ல முந்தைய அரசின் அனைத்து ஒப்பந்தங்களும் ஆய்வு செய்ப்படும் எனவும் புதிய முதலமைச்சர் பதவி ஏற்றதும் தனது முதல் செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்தார். சர்ச்சைக்குரிய நீர் மறுசீரமைப்பு ஒப்பந்தம் முந்தைய முதல் அமைச்சர் தன் ஸ்ரீ காலிட் இப்ராஹிம்மால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமாகும். துறை தலைவர்களுடன் கலந்தாலோசித்து இவை பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என அஸ்மின் தெர்வித்தார்.

மேலும் அவர் காலிட் நிறுவிய கொள்கைகளின் அடிப்படையிலேயே மாநிலத்தை ஆளப் போவதாகவும் உறுதியாக கூறினார். மக்களின் நலனுக்காகவும் ஒரு பொறுப்பான நிலையான அரசிற்காகவும் காலிட்டின் கொள்கைகளை தொடர்வது தனது கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

Photo Courtesy : www.thestar.com.my