பிபிஎஸ் தலைவர் உள்பட 156 உறுப்பினர்கள் கைது

பிபிஎஸ் தலைவர் உள்பட 156 உறுப்பினர்கள் கைது

police-malaysia

பிபிஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள கடும் நடவடிக்கை தொடர்கிறது. பிபிஎஸ் தலைவர் பி பூன் போ மற்றும் 156 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

பி பூன் போ வாக்குமூலம் அளிப்பதற்கு பினாங்கு மாநில போலீஸ் தலைமையத்திற்கு சென்ற போது அங்கு பிற்பகல் மணி 4.30 அளவில் கைது செய்யப்பட்டார்.

பியுடன் மாநில முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் பினாங்கு மாநில போலீஸ் தலைமையத்திற்கு சென்றிருந்தனர்.

பிபிஎஸ் அமைப்பு சங்கங்கள் பதிவகத்தில் பதிவு செய்யப்படாததால் அந்த அமைப்பை சட்ட விரோத அமைப்பாக எடுத்துக் கொண்ட போலீஸ் பிபிஎஸ் உறுப்பினர்களை கைது செய்தது வருகிறது.இதுவரை 156 பிபிஎஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

பினாங்கு முதலமைச்சர் கைது செய்யப்படவில்லை என்று நோர்த்-வெஸ்ட் மாவட்ட போலீஸ் தலைவர் மைஓர் பாரிடாலாட்ராஸ் வாஹிட் கூறினார்.