பெர்வானி உலுசிலாங்கூர் ஏற்பாட்டில் சுங்கை சோ தாமான் டாயாவில் முறுக்கு மற்றும் சாக்லட் செய்யும் பயிற்சி வகுப்பு

பெர்வானி உலுசிலாங்கூர் ஏற்பாட்டில் சுங்கை சோ தாமான் டாயாவில் முறுக்கு மற்றும் சாக்லட் செய்யும் பயிற்சி வகுப்பு

Uselangor3 Uselangor4

உலுசிலாங்கூர் பெர்வானி குழுவினர் மற்றும் உலுசிலாங்கூர் ம.இ.கா மகளிர் ஏற்பாட்டில் சுங்கை சோ தாமான் டாயாவில் முறுக்கு மற்றும் சாக்லட் செய்யும் பயிற்சி வகுப்பு 12-10-2014 அன்று நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவி திருமதி சிவபாக்கியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்தாங் காளி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு துவான் மாட் நட்ஹாரி கலந்து கொண்டு சிறப்பித்தார். தாமான் டாயாவை சேர்ந்த 10 ஏழை தாய்மார்களுக்கு தீபாவளி சிறப்பு அன்பளிப்புகள் வழங்கினார்.

பெருநாட்காலங்களில் கூடுதல் வருமானம் தேடுவதற்க்கு இதுபோன்ற பயிற்சிகள் ஏதுவாக இருக்குமென இந்நிகழ்வின் ஏற்பாட்டு குழு தலைவி செல்வி மகேஸ்வரி தெரிவித்தார்.

Uselangor1 Uselangor2 Uselangor5 Uselangor6