மத்திய அரசாங்கத்தால் தமிழ் இடைநிலை பள்ளி தாமதம்

மத்திய அரசாங்கத்தால் தமிழ் இடைநிலை பள்ளி தாமதம்

s1

டிசம்பர் 15, பினாங்கு மாநிலத்தில் இடைநிலை பள்ளிக்கான அடிப்படை வேலைகளை முடித்துவிட்ட நிலையில், அதற்கு லைசென்ஸ் (உரிமம்) வழங்குவதில் மத்திய அரசாங்கம் அலட்சியம் காட்டிவருகிறது. அந்த உரிமம் உரிய நேரத்தில் கிடைத் திருந்தால் இந்நேரம் இம்மாநிலத்தில், இடைநிலை தமிழ்ப்பள்ளி கட்டுமானம் தொடங்கப்பட்டிருக்கும் என அம்மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.

தேசிய மொழிக்கும், சின மொழிக்கும் இடைநிலைப்பள்ளிகள் நாடெங்கிலும் பரவலாக இருப்பதை போன்று நமது தமிழ்மொழிக்கும் இடைநிலைப்பள்ளிகள் வேண்டுமென தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். ஆயினும், எங்களின் குரலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செவிசாய்ப்பதாக தெரியவில்லை நாங்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை அதற்கு விண்ணப்பமும் செய்து விட்டோம். ஆனால் அதற்கு அவர்கள் இன்னமும் செவிசாய்ப்பதாக தெரியவில்லை.