MH17 விமான விபத்து செயற்கைகோள் அனுப்பும் படங்களை பொய்யானவை

MH17 விமான விபத்து செயற்கைகோள் அனுப்பும் படங்களை பொய்யானவை

mh17

நவம்பர் 18, MH17 விமான விபத்து குறித்து செயற்கைகோள் அனுப்பும் படங்களை உறுதி படுத்தும் வரை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம், மலேசியாவுக்குச் சொந்தமான MH17 விமானம் உக்ரைன் போர் விமானத்தால் சுடப்பட்டது என்பதைக் குறித்து செயற்கைகோள் படங்களைச் சம்பந்தப்பட்ட உலக புலனாய்வுத்துறை உறுதி படுத்தும் வரை அதனை பொதுமக்கள நம்ப வேண்டாம் என ஹிஷாமுடின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விமான சம்பவத்தைக் குறித்து வெளியிடும் தகவல்களைக் கண்மூடித்தனமாக நம்பி விட வேண்டாம் என்றும் உலக புலனாய்வுத்துறை தகவல் தெரிவிக்கும் வரை பொறுமையுடன் காத்திருப்பது அவசியம் என ஹிஷாமுடின் கூறினார்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் செயற்கைகோள் படங்கள் அனைத்தும் பொய்யானவை என வெளிநாட்டு தகவல் ஊடகங்கள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.