ஜெனீவா பயணம் செய்ய தீப்தி குமாருக்கு ம இ கா இளைஞர் பிரிவு உதவி

ஜெனீவா பயணம் செய்ய தீப்தி குமாருக்கு ம இ கா இளைஞர் பிரிவு உதவி

DiptiKumar3 DiptiKumar4

மலேசிய இந்திய மாணவி செல்வி. தீப்தி குமார் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார். அவர் 12/09/2014 அன்று 2015 பிறகு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பிலும் 15/09/2014 அன்று குழந்தைகள் உரிமைகளும் பாதுகாப்பும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்த இருக்கிறார். மேலும் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் வரை செல்வி. தீப்தி மனித உரிமை ஆணயத்தின் பிரதிநிதியாக இருப்பார். தீப்தி ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் முதல் முறையாக இளைஞராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ நிகழ்வில் கலந்து கொள்கிறார். தீப்தி லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றிருக்கிறார். மேலும் இதுவரை பல சமூக சேவைகள் அமைப்புகளில் பல நாடுகளில் தொண்டு புரிந்துள்ளார். இவரது படிப்பும் அனுபவமும் ஐ.நா குழுவிற்கு உதவியாக இருக்கும்.

தீப்தியின் ஜெனீவா பயண செலவிற்காக 5000 ரிங்கட் உதவியை ம இ கா இளைஞர் பிரிவு 10/09/2014 அன்று நடந்த ஒரு நிகழ்வில் வழங்கப்பட்டது.  செல்வி. தீப்தி குமார் ஐ.நா சபையில் உரை நிகழ்த்துவது என்பது நமது மலேசிய  இந்தியர்களை ஊக்குவிக்கும் என நிகழ்வில் பேசிய ம இ கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் அவர்கள் தெரிவித்தார். இத்தகைய திறமைகள் மலேசிய இந்தியர்களிடம் வெளிப்படும் போது ம இ கா இளைஞர் பிரிவு அவர்கள் வெற்றி பெற உதவியளித்து ஊக்குவிக்கும் என்ற செய்தியை அறிவிக்கவும் தீப்திக்கு இந்த உதவியை வழங்குவதாகவும் திரு. சிவராஜ் தெரிவித்தார். இத்தகைய வெற்றியாளர்களை முன்னுதாரணமாக கொண்டு மலேசிய இந்திய மாணவர்களும் இளைஞர்களும் தங்களால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகங்களை விடுத்து தங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பாண்மைய்யிலிருந்து வெளி வந்து சாதனைகள் பல புரிய வேண்டும் எனவும் திரு. சிவராஜ் தெர்வித்தார். செல்வி. தீப்தியும் அவரது கருத்தை ஆமோதித்து  இந்த உதவிக்கு நன்றியும் தெரிவித்தார்.

DiptiKumar1 DiptiKumar2 DiptiKumar6 DiptiKumar7

[vsw id=”upe3G1iEoCA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]