MIMA SRC ஏற்பாட்டில் கலைஞர்கள் மீடியா ஒற்றுமை கால்பந்து போட்டி

MIMA SRC ஏற்பாட்டில் கலைஞர்கள் மீடியா ஒற்றுமை கால்பந்து போட்டி

aum1

சமீபத்தில் காலமான மலேசிய தமிழ் கலைஞர் ஜோ மற்றும் சதீஷ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் MIMA SRC ஏற்பாட்டில் ஓம் – கலைஞர்கள் மீடியா ஒற்றுமை விளையாட்டு கால்பந்து போட்டி 29/06/2017 மாலை 07.00 மணிக்கு துவங்கி ஷா ஆலமில் உள்ள மட்சுஷிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டியில் பல மலேசிய தமிழ் கலைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மறைந்த கலைஞர்கள் ஜோ மற்றும் சதீஷ் ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக நடந்த கால்பந்து போட்டியில் நான்கு ஆண்கள் அணிகளும் இரண்டு பெண்கள் அணிகளும் கலந்து கொண்டன. MIMA SRC A, MIMA SRC B, MIMA SRC C மற்றும் MIFA Veterans ஆகிய ஆண்கள் அணிகளும் MIMA SRC Women A மற்றும் MIMA SRC Women B ஆகிய பெண்கள் அணிகளும் போட்டியில் கலந்து கொண்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்கள் கால்பந்து போட்டிகளில் முதல் இடத்தை MIFA Veterans அணி பிடித்தது. இரண்டாவது இடத்தை MIMA SRC B அணி பிடித்தது. இறுதிப் போட்டியில் MIFA Veterans அணியும் MIMA SRC B அணியும் மோதின. 1-0 என்ற கோல் கணக்கில் MIFA Veterans அணி வென்று முதல் இடத்தை பிடித்தது. 3 வது இடத்தை MIMA SRC A அணியும் நான்காவது இடத்தை MIMA SRC C அணியும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் MIMA SRC Women A முதல் இடத்தை பிடித்தது. MIMA SRC  Women  A மற்றும் MIMA SRC Women B ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் MIMA SRC  Women  A 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் ம.இ.கா முக்கிய தலைவரும் MIFA தலைவருமான டத்தோ T.மோகன் மற்றும் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜ் சந்திரன் மற்றும் டத்தோ சந்திர குமணன் ஆகியோர் கலந்துகொண்டு விளையாடி சிறப்பித்தனர்.

whatsapp-image-2017-06-29-at-5-25-40-pm whatsapp-image-2017-06-29-at-5-25-41-pm whatsapp-image-2017-06-29-at-5-46-50-pm whatsapp-image-2017-06-29-at-6-27-34-pm whatsapp-image-2017-06-29-at-6-28-34-pm whatsapp-image-2017-06-29-at-7-07-38-pm-1 whatsapp-image-2017-06-29-at-7-07-38-pm whatsapp-image-2017-06-29-at-7-07-46-pm-1 whatsapp-image-2017-06-29-at-7-22-56-pm whatsapp-image-2017-06-29-at-7-22-59-pm whatsapp-image-2017-06-29-at-7-23-00-pm whatsapp-image-2017-06-29-at-7-23-03-pm whatsapp-image-2017-06-29-at-7-34-08-pm whatsapp-image-2017-06-29-at-7-34-18-pm

19437265_255675511585429_1554338777815526067_n 19510082_256268111526169_5820540610213039773_n 19510195_256267061526274_2697632058050394059_n 19510587_256178781535102_1002367003011014168_n 19510664_256268021526178_2204618207030992329_n 19511065_256267724859541_7993059086204805942_n 19511144_256267181526262_7086787071538806202_n 19553864_256266594859654_6416578840004251756_n 19553867_256267698192877_2340778176263370744_n 19553964_256266724859641_6434233126784078334_n 19554127_256267151526265_6419041122268554361_n 19554196_255675484918765_6260593050966815442_n 19642488_256267274859586_3090578363800145538_n