நுழைவாயிலை அழகுப்படுத்த மட்டும் ரி.மா கோடி விரயம் செய்யும் சிலாங்கூர் அரசு

Online Tamil News Malaysia

Online Tamil News Malaysia

நவம்பர் 27, சிலாங்கூர் மாநில நுழைவாயிலை அழகுப்படுத்தும் பணிகளுக்காக மட்டும் ரி.மா 9.7 கோடியை செலவு செய்ய துணிந்திருக்கும் சிலாங்கூர் அரசின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

நுழைவாயிலை அழகுப்படுத்த வேண்டியது அவசியமே அன்றி அத்தியாவசியம் அல்ல. அத்தியாவசியமான பல திட்டங்களுக்கு இந்த தொகையை அஸ்மின் அலி உபயோகித்து இருக்கலாம்.

மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்திருக்கலாம், மாநிலத்தின் சமூகநல திட்டங்களுக்கு அளித்திருக்காலம், அல்லது வெள்ளப் பருவத்தை எதிர்நோக்கி இருக்கும் இச்சூழலில் மிகவும் மோசமாக இருக்கும் துயர்துடைப்பு மையங்களை மேம்படுத்தி இருக்கலாம், அல்லது அத்தொகையைக் கொண்டு இந்திய இளைஞர்களை வர்த்தகர்களாக உருவாக்க உதவியிருக்கலாம். இப்படி எத்தனையோ மக்களுக்கும் மாநிலத்திற்கும் பயன்படக் கூடிய திட்டங்கள் இருக்கையில், இவ்வளவு பெரிய தொகையை ஏன் மாநில முதல்வர் விரயமாக்கினார் என்று தெரியவில்லை.

நாட்டின் மக்களை முன்னிருத்தி பிரதமர் அவர்கள் வரையருத்த வரவுச் செலவு கணக்கை குறைக் கூறிய எதிரணிக் தலைவர்கள், அஸ்மினின் செயலுக்கு என்ன காரணத்தை வழங்கப்போகிறார்கள் என்றுத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி, இஸ்லா (ISLAH) என்றுக் குறிபிடப்படும் ஒரு நிறுவனத்திற்கு இந்த குத்தகையை வழங்கியுள்ள சிலாங்கூர் அரசு, எந்த அடிப்படையில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒத்துக்கொண்டது என்றும் அதற்கான கணக்குவழக்குகளை உடனடியாக காட்டுவதும் அவசியம்.

கஜேந்திரன் துரைசாமி

கோத்தா ராஜா தொகுதி

ம.இ.கா இளைஞர் பிரிவு