மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கையை ஐ.நா. அவசர ஆலோசனை

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கையை ஐ.நா. அவசர ஆலோசனை

chinaaa

கோலாலம்பூர்: உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர ஆலோசனை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த அவசர கூட்டம் நடைபெற்றது. உயரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோடியாங் லாய் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தபட்டதை பற்றி பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணை நடத்தபட் வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே இந்த சம்பவத்துக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். 

உக்ரைனை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் உக்ரைனில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில்  ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார். 
இதனிடையே விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் சிதைவுகளில் இருந்து 181 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

116 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு மலேசியாவில் இருந்து உக்ரைன் தலைநகர் கியுவுக்கு விரைகிறது. நெதர்லாந்து தலைநகரில் இருந்து மலேசிய த¬லைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் சென்று கொண்டிருந்த மலேசிய விமானம் ரஷ்ய எல்லை அருகே உக்ரைன் நாட்டு கிழக்கு பகுதியில் ஏவுகணை மூலம் சுட்டு வீழத்த்ப்பட்டது.