தே.மு டான் ஶ்ரீ காலிட்டுக்கு ஆதரவு அளிக்கும்

தே.மு டான் ஶ்ரீ காலிட்டுக்கு ஆதரவு அளிக்கும்

muhi11-300x248

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமுக்கு சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி ஆதரவாக இருக்கும் என துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

“எந்தவொரு நிபந்தைனையுமின்றி” பதவி நெருக்கடியைச் சந்திதுள்ள டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமுக்கு தேசிய முன்னணி ஆதரவாக இருக்கும் என தேமு துணைத்தலைவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

ஒருவேளை டான் ஶ்ரீ காலிட் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற்றால், சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காலிட்டுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள் என டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.