நிக்கோல் டேவிட் மலேசியாவிற்கு இரண்டாவது தங்கம் பெற்றுத் தந்தார்.

நிக்கோல் டேவிட் மலேசியாவிற்கு இரண்டாவது தங்கம் பெற்றுத் தந்தார்.

CWGNicol

நிக்கோல் டேவிட் க்ளாஸ்கோவில் நடைபெறும் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மலேசியாவிற்கு இரண்டாவது தங்கத்தை வென்று தந்துள்ளார். இவர் பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் 12-10, 11-2, 11-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தை சேர்ந்த லாரா மசாரோ வை வீழ்த்தி தங்கம் வென்றார்.

முன்னதாக சனிக்கிழமை அன்று பலு தூக்கும்  போட்டியில் 69 கிலோ எடை பிரிவில்  முகமது ஹபீபீ மன்சூர் மலேசியாவிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்திருந்தார்.

நிக்கோலின் இந்த வெற்றி மற்ற மலேசிய வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும். நிக்கோல் இரட்டையர் பிரிவில் லோ வீ  வெர்னுடன் இணைந்து வெற்றி பெற பாடுபடுவார் என நம்பப்படுகிறது.