MH17 இறந்தவர்களின் உடல்கள் விரைவில் மலேசியா கொண்டுவரப்படும் – நாஜிப்

MH17 இறந்தவர்களின் உடல்கள் விரைவில் மலேசியா கொண்டுவரப்படும் - நாஜிப்

NAJIB TUN RAZAK / SERI PERDANA

 

கடந்த சில தினங்களாக MH17 விபத்து நடந்த இடத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம்.

தற்போது  தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் கடினமான நிலையற்ற ஒரு சூழலில் நம் முன் இருக்கும் பிரச்சனைகளை பற்றி கலந்தாலோசித்துள்ளோம். விமானத்திலிருந்து மிக முக்கிய ஆவணங்களை பெறுவது, சுதந்திரமான புலனாய்வை துவங்குவது மட்டுமல்லாமல் மிகவும் முக்கிய பணியான இறந்தவர்களின் உடல்களையும் உடைமைகளையும் மீட்பது ஆகியவை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

இன்று இரவு இந்த ஒப்பந்தத்திற்கான அடிப்படை நிறுவப்பட்டுள்ளது.

முன்னதாக மாலை நான் விபத்து நடந்த பகுதியின் தலைவர் அலெக்ஸாண்டர் போரோடாய் உடன் பேசினேன். கீழ்கண்ட மூன்று விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:

முதலாவதாக டோரெஸில் உள்ள 282 உடல்கள் தொடர்வண்டி மூலம் கார்கிவ் கொண்டுவரப்பட்டு நெதர்லாந்து பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும். உக்ரைன் நேரத்தின்படி மாலை அந்த தொடர்வண்டி மலேசியாவை சேர்ந்த 6 பேர் கொண்ட மீட்பு குழுவினருடன் கிளம்பும். உடல்கள் பிறகு மலேசிய குழுவினருடன் நெதர்லாந்து விமானமான ஹெர்குலஸ் C130 மூலம் ஆம்ஸ்டர்டாம் வந்தடையும். அங்கு தேவையான பிரேத பரிசோதனைக்கு பிறகு மலேசிய பிரஜைகளின் உடல்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்படும்.

இரண்டாவதாக உக்ரைன் நேரப்படி இரவு சுமார் 9.00 மணி அளவில் இரண்டு கருப்பு பெட்டிகளும் டோனெட்ஸ்க் கில் மலேசிய குழுவிடம் ஒப்படைக்கப்படும். அப்பெட்டிகள் மலேசிய குழுவின் வசம் இருக்கும்.

மூன்றாவதாக சுதந்திரமான சர்வதேச புலனாய்வு குழுவினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் புலனாய்வு செய்ய தகுந்த பாதுகாப்பும் அனுமதியும் வழங்கப்படும்.

ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும் அதை செயல்படுத்த இன்னும் பல கட்டங்கள் இருக்கிறது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த பணிகள் செய்து முடிக்க பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் அவசியமாகின்றன. திரு. மோரோடாயும் அவரது மக்களும் இதுவரை ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர்.

ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது போல இறந்தவர்களின் உடல்கள் மற்றும் உடமைகள் ஒப்படைத்தல், கருப்பு பெட்டி ஒப்படைத்தல் மற்றும் சர்வதேச புலவாய்வு குழுவிற்கு விபத்து நடந்த இடத்தில் அனுமதி வழங்குதல் ஆகியற்றை செயல்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட கேட்டுக்கொள்கிறேன்.

இவையெல்லாம் நடந்தால்தான் MH17 விபத்து பற்றிய புலனாய்வு உண்மையில் துவங்க முடியும். அதன் பிறகே பலியானவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த முடியும். விபத்திற்கான உண்மையான காரணத்தையும், யார் இதற்கு காரணம் என்பதையும் நாம் கண்டறிந்து நியாயம் பெற வேண்டும்

கடந்த தினங்களில் மக்களின் சோகத்தையும் கோவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் குரல் கொடுக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனால் தேவையான பலன் கிடைக்க சில சூழலில் அமைதியாக செயல்பட வேண்டியுள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நடந்ததை எதுவும் மாற்றிவிடாது என்பதை நான் நன்கு புரிந்திருக்கிறேன். இழந்த உயிரும் கௌரவமும் மீண்டும் கிடைக்காது.

MH17 விபத்தில் பலியானோருக்கு நெருக்கமானவர்களுக்காக நான் மிகுந்த மன வேதனை அடைகிறேன். இந்த ஒப்பந்தம் அவர்களின் காத்திருப்பை ஒரு முடிவிற்கு கொண்டுவரும் என நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு பிரதம மந்திரி டத்தோ நாஜிப் ரசாக் 21/07/2014 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.