சீன, தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதா: மு. குலசேகரன் கண்டனம்

சீன, தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதா: மு. குலசேகரன் கண்டனம்

download (9)

அக்டோபர், 21 நேற்று ஒரு நாளிதழில் உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் ஒரே பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விருப்புவதாக செய்தி வந்துள்ளது. இந்த செய்தி மிகவும் கண்டனத்துக்குரியது.

இந்த நாட்டில் சீன தமிழ்ப்பள்ளிகள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்ற உறுதி மொழி பிரதமரால் ம.சீ.ச மாநட்டில் வழங்கப்பட்டு ஒரு வாரம் கூட பூர்த்தி ஆகாத நிலையில், உள்துறை அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது பிரதமருக்கே சவால் விடுவது போல் இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறினார்.