இந்தியர்களுக்கென சிறப்பு வீடமைப்பு திட்டம் தேவை தஞ்சோங் காராங் நாடளுமன்ற உறுப்பினர் கருத்தை தேசிய ம.இ.கா இளைஞர் விரிவு வரவேற்கிறது

இந்தியர்களுக்கென சிறப்பு வீடமைப்பு திட்டம் தேவை தஞ்சோங் காராங் நாடளுமன்ற உறுப்பினர் கருத்தை தேசிய ம.இ.கா இளைஞர் விரிவு வரவேற்கிறது

Picture1

மலேசிய இந்தியர்கள் அதிலும் தோட்டப்புறத்திலிருக்கும் இந்தியர்கள் எதிர்நோக்கும் வீட்டுடைமை பிரச்சனையை அடையாளங்காட்டி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய முன்ணணியின் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஹஜி நோ அவர்கள்து கருத்தைம.இ.கா இளைஞர் பிரிவு வரவேற்கிறது.

தமது உரையில் டத்தோ ஸ்ரீ அவர்கள் ஒரு புது வீடமைப்பு திட்டம்,குறிப்பாக இந்தியர்களுக்கு மட்டும் எற்படுத்த வேண்டும் காரணம் தோட்டப்புறத்தை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது அந்த தோட்டப்புறத்தில் வசித்த பெருப்பாலும் இந்தியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். மேலும் தொடர்கையில் தோட்டப்புறத்தை மேம்படித்தி வீடுகள் கட்டும் தனியார் நிறுவனங்கள் முதலில் அத்தோட்டத்தில் வசிப்பவர்களுக்கு முதற்சலுகை வழங்கி அவர்கள் வீடுகள் வாங்க ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன். அவ்வாறு முடியாத பட்சத்தில் அவர்களுக்கு ஒரு 4,000 அல்லது 5000 சதுர அடியில் ஒரு நிலத்தை அவர்களுக்கு வழங்கினால் அரசாங்கம் கொடுக்கும் மற்ற சலுகைகளை பயன்படுத்தி அவர்கள் அதில் வீடுகள் கட்டி அதே இடத்தில் வாழ வழி செய்யலாம்.

இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை எடுத்துக்கூறி அதற்கு தீர்வையும் முன்வைத்த டத்தோ ஸ்ரீயின் இப்பரிந்துரையை நாங்கள் வரவேற்கிறோம். காரணம் அவரது கூற்று முற்றிலும் உண்மை ஒவ்வொரு நாளும் இளைஞர் பிரிவிற்கு இப்பிரச்சனை தொடர்பில் பலர் வந்து செல்கின்றனர். குறிப்பாக சிலாங்கூர் மாநில இந்தியர்கள் பலர் தோட்டப்புறத்தை விட்டு வெளியேற்றப்பட்டதும், வசிக்க ஒரு இடம் இன்றி நகர்புறங்களிக்கு வந்து அல்லலபடுகின்றனர். வயதான காலத்தில் வீடுகள் தேடி அலைந்து கடைசியில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு.

அதுமட்டுமின்றி இந்தியர்களின் ஈடுபாடு விவசாயத்தில் குறைந்ததற்கு காரணமும் இதுவென்று கூறலாம். ஆக டத்தோ ஸ்ரீயின் கருத்துப்படி எதாவது ஒரு வீட்டைமை திட்டம் இந்தியர்களுக்கென்று அமலாக்கப்பட்டால் அவர்களது வீடு பிரச்சனை தீர்த்து அதே வேளையில் அவர்கள் விவசாயத்தில் ஈடுப்பட்டு பொருளாதாரத்தை முன்னேற்றும் வழியும் காணப்படும்.