சட்ட விரோதமாக மீன் பிடித்ததால் மலேசிய படகை தகர்த்தது இந்தோனேஸியா

சட்ட விரோதமாக மீன் பிடித்ததால் மலேசிய படகை தகர்த்தது இந்தோனேஸியா

img2

ஜனவரி 9, சட்ட விரோதமாக மீன் பிடித்ததால் மலேசிய மீனவர் படகு சுமத்தரா போலீஸ் படையால் குண்டினால் தகர்க்கப்பட்டது. நேற்று நடந்த இச்சம்பவத்தில் PKFA 7738 படகு பண்டான் தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தப் போது போலீசாரால் தகர்க்கப்பட்டது.
சுமத்தரா உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் இப்படகு வெடிக்கப்பட்டது என சுமத்தாரா போலீஸ் படைத் தலைவர் ஏக்கோ ஹடி தெரிவித்துள்ளார். சுமத்தாரா இந்தோனிசியாவில் சட்டத்திற்கு புறம்பாக மீன் பிடிக்கும் மீனவர் படகை வெடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இச்செயல் சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்கு வந்து மீன் பிடிக்கும் இதர நாட்டு மீனவர்களின் செயலை ஒழிக்க உதவுவதோடு இந்தோனிசியா நாட்டின் மீன் பிடிக்கும் தொழிலை உயர்த்தவும் பாதுகாக்கவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெடித்துச் சிதறப்பட்ட மலேசிய மீனவர்களின் படகில் பயணம் செய்தவர்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.