மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாக பின்பற்ற வேண்டும்: அஸ்மின் அலி

மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாக பின்பற்ற வேண்டும்: அஸ்மின் அலி

Azmin-Ali-w

நவம்பர் 15, மலாய் மற்றும் ஈபான் மொழியிலான பைபிள்களை சரவாக் கிறிஸ்துவ தேவாலய இயக்கத்தினரிம் ஒப்படைத்தது இஸ்லாமிய உண்மையான கோள்கையைப் பிரதிபலிக்கின்றது.
இந்நிலையில், சிலாங்கூரில் வாழும் அனைத்து மக்களும் அவசியம் தத்தம் மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாக பின்பற்ற வேண்டும் என முதல்வர் அஸ்மின் அலி வலியுறுத்தி கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சமயமாக இருக்கும் இஸ்லாம் மதத்திற்கு மதிப்பளிக்கும் அதே வேளையில் அவரவர் சமய நம்பிக்கைகளைச் சுதந்திரமாக பின்பற்றுவது அவசியமானது என அவர் மேலும் கூறினார்.
கடந்த ஜனவரி மாதத்தில், “அல்லா” என்ற வார்த்தை மலாய் மொழி பைபிள்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற தொடங்கிய பிரச்சனையைத் தொடர்ந்து மீண்டும் அந்த 351 பைபிள்களும் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் ஒப்படைக்கப்ட்டது வரவேற்கப்படக் கூடிய விஷயம் எனவும் இந்த பிரச்சனையைச் சுமூகமாக சமாதன முறையில் கையாண்ட சிலாங்கூர் மாநில சுல்தான் ஷராவ்வுடின் அவர்களுக்கும் அஸ்மின் நன்றி தெரிவித்தார்.