மக்கள் கூட்டணி வழங்கிய வாக்குறுதிகள் என்னவாயிற்று

மக்கள் கூட்டணி வழங்கிய வாக்குறுதிகள் என்னவாயிற்று

logo

பிப்ரவரி 25, தேசிய முன்னணி ஆட்சியில் தான் கோயில்கள் இடிக்கப்படும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்கள் ஆட்சிக்குள் இருக்கும் எந்தவொரு மாநிலத்திலும் கோயில்கள் இடிப்படாது என மார்த்தட்டி கூறிய மக்கள் தலைவர்களின் வாக்குறுதிகள் இப்பொழுது என்னவாயிற்று?

சிலாங்கூர் மாநிலத்தில் பல கோயில்களுக்கு இடிக்கப்படும் ஆபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் கிள்ளானில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை முனிஸ்வரர் நாகேஸ்வரி கோயில் இடிக்கப்பட்டது. இக்கோயில் இடிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டப் பொழுதும் சீலாங்கூர் மாநில அரசாங்கத்திடமிருந்து இது குறித்து ஒரு தகவலும் பெரும் வியப்பை அளிக்கிறது.

தேர்தல் சமயத்தில் தேசிய முன்னணி ஆட்சியைப் போல் அல்லாது மக்களின் மனம் நோகும் எந்தவொரு செயலும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று சொன்ன அதே மக்கள் கூட்டணி இன்று கோயிலை இடிக்கிறது, நள்ளிரவில் பேர்கலி உணவகத்தை உடைக்க உத்தவுடன் அதிகாரிகளை அனுப்புகிறது இன்னும் பல கோயில்களை இடிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கிறது.

கோயில்களை இடிப்பதற்கு என்ன காரணம், எது வரை மக்கள் கூட்டணித் தலைவர்கள் அக்கோயிலை காப்பாற்ற முயன்றனர், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? கோயிலுக்கு மாற்று நிலம் தரப்படுமா இல்லை வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்துதரப்படுமா என்று தெரியாமல் கோயில் உறுப்பினர்களும் பொதுமக்களும் குழப்பியுள்ளனர். ஆக, ம.இ.கா உட்கட்சி பூசலில் கருத்து சொல்லி அரசியல் லாபம் எண்ணத்தை விடுத்து இப்பிரச்சனைக்கு உடனடியாக சிலாங்கூர் நல்லதொரு தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.