இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் திவால் எண்ணிக்கை

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் திவால் எண்ணிக்கை

Sivaraj1 (2)

நவம்பர் 4, மலேசிய இளைஞர்கள் மத்தியில் திவால் வழக்கு எண்ணிக்கை உயர்வு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இளம் வயதிலேயே கடனாளிகளாக மாறி வங்கியின் கருப்புப்பட்டியலில் இணைவதை தவிர்ப்பதற்கு இளைஞர்கள் தங்கள் நிதி நிர்வாகம் மீது அக்கறை கொண்டிருக்கவேண்டும். இல்லையேல் தங்களின் எதிர்காலத்தை தொலைத்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாண்டின் முதல் ஆறுமாத கால்க்கட்டத்தில் 22 ஆயிரம் திவால் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்விவகாரம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதை இந்தப் புள்ளி விபரம் காட்டுகிறது. இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்படாவிடில் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

நிதி நிர்வாக ஆலோசனை நிறுவனம் (ஏகேபிகே) அறிக்கையின் படி, அளவுக்கு அதிகமான மருத்துவ செலவீனங்களும், திறமையற்ற சுய நிதி திட்டமிடலும் மலேசிய இளைஞர்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுவதற்கான காரணம் என குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 22.8 விழுக்காட்டினர் அதிகமான மருத்துவ செலவீனங்களாலும், 16.4 விழுக்காட்டினர் திறமையற்ற சுய நிதி நிர்வாகத்தினாலும் திவாலுக்கு காரணமாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே 16 விழுக்காட்டினர் வியாபாரத்தில் ஏற்படும் மந்த நிலையும், 10.9 விழுக்காட்டினர் அதிக அளவிலான கடன் பற்று அட்டை பயன்பாட்டினாலும் திவால் நிலையை அடைந்துள்ளதாக ஏகேபிகே தெரிவித்துள்ளது. நோய்வாய்படுதல், வேலை இன்மை, வியாபாரஹ்ட்தில் தோல்வி போன்றவையும் இளைஞர்களை கடனாளிகளாக ஆக்கி விடுகிறது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை மட்சும் சமார் 286,368 பேர் ஏகேபிகே நிறுவனத்தின் சேவையை நாடியுள்ளனர். அதில் 113 845 பேர் கடன் மேலாண்மை திட்டத்தில் பதிந்துள்ளனர் பெரிய எண்ணிக்கையினான இளைஞர்கள் கடனாளிகளாவதற்கு, கடன் பற்று அட்டை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை கவரும் ப்கையிலான விளம்பரமும் ஒரு காரணமாக அமைகிறது. ஆடம்பரமான வாழ்க்கை சூழலை இத்திட்டங்கள் ஏற்படுத்தி கொடுப்பதால், இளைஞர்கள் முன்யொசனை இன்றி இதில் மாட்டிகொள்கின்றனர்.

இந்நிலையில் விலைவாசி அதிகரிப்பே இதற்கெல்லாம் காரணம் என்று ஒரு தரப்பு சாடுகிறது. இளைஞர்கள் தங்களின் சுய நிதி நிர்வாகத்தை சீராக வைத்திருந்தால், இந்நிலை ஏற்படாது. வாகன கடன், கடனுதவிகளை குறிப்பிட்ட காலங்களில் திரும்ப செலுத்தப்படாததால், திவால் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகின்றனர்.

இன்றைய இளைஞர்களின் ஆடம்பர செலவீனங்களும் இந்த காரணங்களில் இன்றாக அமைகிறது. கடன் பற்று அட்டைகள் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. ‘இன்று வாங்குங்கள், பிறகு செலுத்துங்கள்’ போன்ற திட்டங்கள் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்து, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

நிதி நிர்வாகம் என்பது ஒவ்வொரிடமும் இருக்க வேண்டிய முக்கியமான திறனாகும். சிறுவயதில் இருந்தே இந்த திறனை வளர்த்துவிட வேண்டும். ஆரம்பப்பள்ளியில் சுய நிதி நிர்வாகம் தொடர்பிலான பாடத்திட்டம் வரையப்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். சுய நிதி நிர்வாக பண்புகளை வளர்பதற்கு புதிய பாடத்திட்டம் வரையப்பட வேண்டும். அல்லது தற்போதுள்ள பாடத்திட்டத்தில் இணைக்கும் முயற்சியாவது செய்யப்பட வேண்டும் என்று ம.இ.கா இளைஞர் அணி எதிர்பார்க்கிறது.
மாணவர்கள் மத்தியில் ஏற்படும் விழிப்புணர்வு, இளம் வயதில் திவாலாகும் பிரச்னையை குறைக்கும் வழியாக அமையும், மேலும் சட்டவிரோத கடன் திட்டத்தையும் முறைக்கும் வழியாகவும் இது அமையும் எப்படியாகினும் பெருகி வரும் இளம் வயதில் திவால் பிரச்னைக்கி உடனடி தீர்வு காணப்பட வேண்டுய காலக்கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.