கூட்டாட்சி அரசியலமைப்பு விதிப்படி நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பதில் ம.இ.கா உறுதியாக இருக்கிறது – டத்தோ V.S.மோகன்

கூட்டாட்சி அரசியலமைப்பு விதிப்படி நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பதில் ம.இ.கா உறுதியாக இருக்கிறது - டத்தோ V.S.மோகன்

vsmohan_1

ஷரியா திருத்தங்கள் குறித்து ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் டத்தோ V.S. மோகன் இன்று 22/03/2017 அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கூட்டாட்சி அரசியலமைப்பு விதிப்படி நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பதில் ம.இ.கா உறுதியாக இருக்கிறது.

ம.இ.கா ஷரியா திருத்த மசோதாவிற்கு எதிராக குரல் குரல் கொடுக்கவில்லை என்ற ஹிண்ட்ராப் தலைவர் வயதாமூரித்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது தவறாக திசை திருப்புவதுமாக இருக்கிறது.

முன்னொமொழியப்பட்ட திருத்தங்களை எதிராக ம.இ.கா ஆரம்பம் முதலே தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறது.

நமது சமுதாயத்தின் அரசியலமைப்பு உரிமைகள் முன்மொழியப்பட்டுள்ள ஷரியா திருத்தங்களால் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் பாதுகாத்திட ம.இ.கா கட்சி  சட்ட வல்லுநர்கள், இந்தியர்களின் அரசு சாரா இயக்கங்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து அதற்கான செயப்திட்டத்தோடும் பதிலோடும் தயாராக இருக்கிறது

BN கூட்டணியில் நமது கருத்துகளும், மற்ற கூட்டணி உறுப்பினர்களின் கருத்துகளும் இறுதியில் நிலைத்து வெற்றி பெற்று கூட்டாட்சி அரசியமைப்பு தத்துவத்தின் புனிதத்தன்மையும் நமது நாட்டின் பன்முகத் தன்மையும் தொடர்ந்து காப்பாற்றப்படும் என ம.இ.கா உறுதியாக நம்புகிறது.

இத்தகைய உணர்வுபூர்வமான விஷயங்களில் வாய்தாமூர்த்தி போன்ற விமர்சகர்களை மகிழ்விக்க போர்க்கோலம் பூண்டு மோதல் போக்கை கடைபிடிக்காமல் ம.இ.கா பொறுப்புணர்ச்சியுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு தீர்வை காணவே விருபுகிறது. முஸ்லிம் அல்லாதவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாப்பது குறித்து அணுகுமுறைகளை கட்சியின் மத்திய செயற்குழுவில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்தினை பிரதிநித்துவப் படுத்துவதில் இருந்து நாம் எப்போதும் பின்வாங்க மாட்டோம். மேலும் BN இல் இடம்பெற்றுள்ள நமது பிரதிநிதிகள் அனைவரும் முன்மொழியப்பட்டுள்ள ஷரியா திருத்த மசோதா குறித்து நமது  சமுதாயத்தின் கவலைகளை எடுத்துரைப்பர்.

இவ்வாறு டத்தோ V.S. மோகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்