தான் ஶ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெறுகிறது

தான் ஶ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெறுகிறது

SubraFootball1 SubraFootball2

தான் ஶ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் பாங்கி தேசிய பல்கலைக்கழகத் திடலில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம் ஏற்பாடு செய்து நடத்துகிறது. 5ஆவது ஆண்டாக தொடர்ந்து நடத்தப்படும் தான் ஸ்ரீ சுரமணியம் வெட்ரன் கால்பந்தாட்டப் போட்டியில் இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் அணிகள் கலந்து கொள்கின்றன.

கடந்த ஆண்டு 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்த வருடம் 16 அணிகள் பங்கேற்கின்றன என மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ T. மோகன் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் மலேசியாவில் கால்பந்து விளயாட்டின் வளர்ச்சிக்கு சேவையாற்றியுள்ள மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவர் தான் ஸ்ரீ S. சுப்ரமணியத்தின் பெயரில் நடத்தப்படும் இருந்த வெட்ரன் கால்பந்து போட்டிக்கு இந்த வருடம் அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். போட்டியில் விளையாடும் 16 அணிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 5000 வெள்ளி பரிசாக வழங்கப்படும். இரண்டாவது அணிக்கு 3000 வெள்ளியும், மூன்ராவது மட்டும் நான்காவது அணிகளுக்கு தலா 1000 வெள்ளியும் என மொத்தமாக 10,000 வெள்ளி பரிசுத் தொகையாக வழங்கப்படும் எனவும் மோகன் தெரிவித்தார். தான்ஸ்ரீ சுரமணியம் மலேசிய இந்திய இளைஞர்களிடையே கால்பந்து போட்டி பற்றிய ஆர்வம் ஏற்பட் ஆற்றிய பணிகளை பாராட்டினார்.

இது வெட்ரன் போட்டி என்பதால் ஒரு அணியில் 20 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றிருப்பர். அதில் 5 வீரர்கள் மட்டும் 40-45 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். மற்ற 15 வீரர்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.

கடந்த சனிக்கிழமை 20/09/2014 பிற்பகல் 02.00 மணி அளவில் ம.இ.கா தலைமையகத்தில் 7 வது மாடியில் நடைபெற்று ஒரு நிகழ்வில்  அணிகள் எந்த குழுவில் இடம்பெறவேண்டும் என குலுக்கல் முறையில் முடிவு செய்ப்பட்டது.

நான்கு குழுக்களும் அதில் இடம்பெறும் அணிகளும்

’ஏ’  குழு

பினாங்கு, சிலாங்கூர், புத்ரா ஜெயா, ஜொகூர்

’பி’ குழு

கோலாலம்பூர் ஏ, பேராக், பெர்லிஸ், மலாக்கா

’சி’ குழு

சிலாங்கூர் ஏ, நெகிரி செம்பிலான், மிஃபா, பகாங்

’டி’ குழு

சிலாங்கூர் பி, கோலாலம்பூர் பி, கோலாலம்பூர், கெடா