MILFF இசை நிகழ்ச்சி மலேசிய இசை பிரியர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும்

MILFF இசை நிகழ்ச்சி மலேசிய இசை பிரியர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும்

milff_pressmeet_1

எதிர்வருகின்ற செப்டம்பர் 09 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் KWC பேஷன் மாலில் ஸ்டார் எக்ஸ்போ செண்டரில் மோஜோ ப்ராஜெட்க்ஸ் மற்றும் என்ரிக்கோ கூட்டு ஏற்பாட்டில் MILFF – மலேசியன் இண்டிபெண்டண்ட் லைவ்  பியூஷன் பெஸ்டிவல் நடைபெற இருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் பிரபல பாடல்களை அவர்களின் தனி பாணியில் பாடுவார்கள். ஒவ்வொரு பாடகரும் அவருக்கான தனி தனி இசைக் குழுவினருடன் இணைந்து பாடுவார்கள். இந்த ப்யூஷன் வகை இசைக் கச்சேரியில் விஜய் பிரகாஷ் – ஏ.ஆர்.பி. பேண்ட் கூட்டணி, அகம், சித் ஸ்ரீராம் அவருடைய பேண்ட் கூட்டணி, ஜடாயு – சூரஜ் சந்தோஷ் கூட்டணி மற்றும் ஆலாப் ராஜு அவரது பேண்ட் கூட்டணி ஆகியோர் பாடியும் இசைத்தும் அசத்த இருக்கிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் இவர்களுடன் இணைந்து பாலன் காஷ்மீரா, ஸ்டைலோமாதவன், டான் ஷிவ் ஆகியோரும் மேடையில் பாடுகின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சர்வதேச கலைஞர்கள் மலேசியா வந்தடைந்தனர். அவர்கள் கடந்த 06 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 09 ஆம் தேதி மேடையில் எப்படியான பாடல்கள் இடம்பெறும் யாருடைய பாடல்களை பாடப் போகிறார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு அன்று அவர்கள் பதில் அளித்தனர். சில கலைஞர்கள் பாடியும் அசத்தினார்கள்.

நேற்று 07/09/2017 இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் MILFF நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் கலைஞர்கள்  சோதனையாக முன்னோட்டம் நடத்தி பார்த்தார்கள். 09 ஆம் தேதி மாலை இசைப் பிரியர்களுக்கு ஒரு புதிய அனுபவமும் மிகப் பெரிய இசை விருந்தும் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
milff_pressmeet_2 milff_pressmeet_3 milff_pressmeet_4 milff_pressmeet_5 milff_pressmeet_6 milff_pressmeet_7 milff_pressmeet_8 milff_pressmeet_9 milff_pressmeet_10 milff_pressmeet_11 milff_pressmeet_12 milff_pressmeet_13 milff_pressmeet_14 milff_pressmeet_15 milff_pressmeet_16 milff_pressmeet_17 milff_pressmeet_18 milff_pressmeet_19 milff_pressmeet_20 milff_pressmeet_21 milff_pressmeet_22 milff_pressmeet_23 milff_pressmeet_24 milff_pressmeet_25 milff_pressmeet_26 milff_pressmeet_27 milff_pressmeet_28 milff_pressmeet_29 milff_pressmeet_30 milff_pressmeet_31 milff_pressmeet_32 milff_pressmeet_33milff_1milff_2milff_3milff_4milff_5milff_6