slide
Prev
Next
ம.இ.கா புத்ராவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகள்.*     ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பலகலைக்கழகமும் இணைந்து உதவித்தொகை திட்டம்.*    தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.*     நடிகர் ஜோ இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.*

சற்றுமுன்

மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் ஏற்பாட்டில் அக்டோபர் 07 ஆம் தேதி மாலை 07 மணியளவில் ஆக்சியாடா அரினா உள் அரங்கில் ராஜா த ஒன் மேன் என்ற இசைஞானி இளையராஜாவின் இன்னிசை மேடை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க இசைஞானியும் அவரது ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் மற்றும் மேடையில் பாடப் போகும் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களும் மலேசியா வந்தடைந்தனர். மலேசியா வந்துள்ள இளையராஜா அக்டோபர் 04 அன்று ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். நேற்று 05 அக்டோபர் 2017 மாலை இளையராஜா இசை மற்றும் மேலான்மை பிரைவேட் லிமிடட் IMM நிறுவனத்திற்கும் ஏசியா […]

ஸ்பெயினில் வாரிசுரிமை கோரி பெண் ஒருவர் தொடுத்த வழக்கு தொடர்பாக சர்ரியலிஸ்ட் பாணி ஓவியம் வரைவதில் புகழ்பெற்றவரான சால்வடார் டாலியின் உடலை, மரபணு சோதனைக்காக தடவியல் நிபுணர்கள் தோண்டி எடுத்துள்ளனர். நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது, ஓவியர் டாலியின் பற்கள், எலும்புகள் மற்றும் நகங்களிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது தாயுடன் ஓவியர் டாலிக்கு தொடர்பு இருந்ததாக கூறி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஓவியரின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தனது தரப்பு வாதங்கள் உண்மை என அந்த பெண் நிரூபித்தால், தற்போது ஸ்பெயின் அரசின் வசம் இருக்கும் டாலியின் சொத்துகளில் அவர் பங்கு பெற முடியும். […]

Categories: உலகம்

கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகையில் இன்று 24/04/2017 காலை நடந்த கோலாகலமான விழாவில் மலேசியாவின் 15வது மாமன்னராக மாட்சிமை  பொருந்திய மாமன்னர் சுல்தான் முகமட் V அவர்கள் அரியணை ஏறினார். மாமன்னர் கிளந்தானை சேர்ந்தவராவார். அவருக்கு 42 வயதாகிறது. இவர் மக்களுடன் எளிமையாக பழகக் கூடியவர். மன்னராக பொறுப்பேற்றவுடன் அவர் ஆற்றிய ஏற்பு உரையில் “பல இனங்கள், மதங்கள், கலாச்சாரமும், வாழ்க்கை முறைகளும் கொண்டிருந்தாலும் மலேசியர்கள் அனைவரும், சமாதானமாகவும், ஒற்றுமையுடனும் பரஸ்பர மரியாதை கொடுத்தும் வாழ முடியும் என பல காலங்களாக நிரூபித்திருக்கிறோம். இதுதான் நமது பலமும் தனித்துவமும்” என மாமன்னர் கூறினார். மேலும் நாளைய தலைவர்கள் இன்றைய இளைஞர்கள் என்றும் […]

ஜனவரி 06, அமெரிக்காவைச் சேர்ந்த வணிக பத்திரிகையான போர்ப்ஸ் சமூக நிறுவனர்கள், அறிவியல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் தொழில் அதிபர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில் சுமார் 600 ஆண்கள் மற்றும் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினருமாக 45 தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். நுகர்வோர் துறையில், ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான ரித்தேஷ் அகர்வால் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 22. இவர் இந்தியாவில் 100 நகரங்களில் 2,200 சிறிய ஓட்டல்களை நிர்வகித்து வருவதற்காக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ககன் பியானி (28 வயது), […]

Categories: உலகம்

ஜனவரி 05, சீனாவில் நின்க்சியா தலைநகரான யின்சுவானில் இன்று காலை பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 14 பேர் பலியாகியுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளன்னார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பத்து நிமிடங்களில் தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

Categories: உலகம்

டிசம்பர் 30, சிரியாவில் வான்வெளி தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை தெரிவிக்கின்றன. பாரிஸ் தாக்குதலில் சுமார் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எல். இயக்கத்தினர் மீது சிரியாவில் அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியது.

Categories: உலகம்

டிசம்பர் 29, தீவிரவாதி ஹபிஸ் சயீத் இந்தியா மீது தாக்குதல் நடத்த 24 மணி நேர சைபர் செல் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லாகூரில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தீவிரவாத தொடர்பான 2 நாள் மாநாட்டில், இந்தியா மீது இணையதளம் மூலம் போர் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அந்த கூட்டத்தில் சயீத் ஹபிசும் அவரது மகனும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தீடிரென பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை கடந்த வாரம் சந்தித்தார்.

Categories: உலகம்

டிசம்பர் 28, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் விமான நிலையத்தில் குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றின் மூலம் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் தக்குதல் நடத்தப்பட்டது. பலியானவர்கள் தகவல் ஏதும் வெளியாகவில்லை. போலீசாரும் ஏராளமான மீட்புபடையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Categories: உலகம்