எஸ்.பி.எம் 2016 தேர்வு முடிவுகள் தேசிய சராசரி தர புள்ளி – கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு

எஸ்.பி.எம் 2016 தேர்வு முடிவுகள் தேசிய சராசரி தர புள்ளி  - கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு

 

16marspm4

2016 எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் நேற்று 16/03/2017 அன்று வெளியிடப்பட்டது. தேசிய சராசரி தர புள்ளி (National Grade Point Average – NGPA) 5.10 ஆக பதிவாகியிருப்பதாக கல்வித்துறை இயக்குநர் தன் ஸ்ரீ டாக்டர் கை முகமது யூசுப் தெரிவித்தார்.

2016 முடிவுகள் 2015 முடிவுகளான 5.15 என்ற சராசரியைவிட சிறப்பாகவே இருக்கிறது என அவர் தெரிவித்தார். குறந்த NGPA என்பது மாணவர்கள் தேர்வில் சிறந்து விளங்கியுள்ளனர் என அர்த்தமாகிறது என்று அவர் எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளை கல்வித்துறையில் அறிவிக்கும்போது தெரிவித்தார்.

ஆனால் நேரடி As மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 2015 விட 2016 இல் சற்று குறைவாக இருக்கிறது. 2016 இல் 8,647 மாணவர்களே As வாங்கியுள்ளனர். இது மொத்தமான எழுதியவர்களில் 2.13% ஆகும். ஆனால் 2015 2.38% மாணவர்கள் அதாவது 9,721 மாணவர்கள் As வாங்கியிருந்தனர்.

கடந்த 2015 தேர்வு எழுதிய மாணவர்களைவிட இந்த 2016 தேர்வை குறைவான மணவர்களே எழுதியுள்ளனர். 434,535  மாணவர்களே 2016 ட் ஹேர்வு எழுதியுள்ளனர். ஆனால் 2015 இல் 440,682 மாணவர்கள் எழுதியுள்ளனர்.