தமிழ்

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆண்டு திருமுறை விழா

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆம்டு திருமுறை விழா வருகின்ற 20/08/2017 காலை 08.00 மணிக்கு பண்டார் உத்தாமா டாமான்சாரா, எப்பிங்காம் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவிருக்கின்றது. மாநிலத் தலைவர் தொண்டர்மணி திரு. மு.முனியாண்டி அவர்கள், பொதுமக்கள் அனைவரையும் திருமுறை விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார். இவ்விழாவிற்கு மாண்புமிகு கணபது ராவ் மற்றும் மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் இருவரும் சிறப்பு வருகை மேற்கொள்வர். மேல் விவரங்களுக்கு தொண்டமணி திரு. மு.முனியாண்டி அவர்களை (012-619 4970) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மலேசிய இந்து

மலேசிய இந்து சங்கம் பத்தாங் பெர்சுந்தை வட்டார பேரவையின் 17வது ஆண்டு திருமுறை ஓதும் விழா

மலேசிய இந்து சங்கம் பத்தாங் பெர்சுந்தை வட்டார பேரவையின் ஏற்பாட்டில் 17வது ஆண்டு திருமுறை ஓதும் விழா 06/08/2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணிக்கு துவங்கி மாலை 04.30 மணி வரை சிலாங்கூர் பெஸ்தூரி ஜெயாவில் உள்ள தேசிய வகை பெஸ்தூரி ஜெயா தமிழ்ப்பள்ளியில்

7-வது ஆண்டில் பீடு நடைப் போட்டு கொண்டிருக்கிறது மாணவர் முழக்கம் போட்டி

கோலாலம்பூர், 6 ஜூலை 2017 – தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை உலக அரகில் முன்னெடுத்து செல்லும் நோக்கில் உருவாக்கம் கண்ட மாணவர் முழக்கம் போட்டி, இவ்வருடம் தொடர்ந்து 7-வது முறையாக நடைப்பெறவுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய இப்போட்டி நம் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தேசிய அளவில் அடையாளம் காட்டியபோது, உலக அரங்கிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு முதல் முறையாக அனைத்துலக மாணவர் முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. 2011-ஆம் ஆண்டு குழுக்கள் மோதும் சொற்போராக தொடங்கப்பட்டு, பின்னர் மாணவர்களின் தனி

உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 2017

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 24/06/2017 துவங்கி 25/06/2017 வரை நடைபெறுகிறது. 24/06/2017 அன்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைவருமான “எழுத்தாண்மைத் ஏந்தல்” பெரு. அ. தமிழ்மணி வரவேற்புரையாற்றினர். மாநாட்டில் கலந்து கொண்ட  மத்திய சுகாதார அமைச்சரும், ம இ கா தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கீழ்வருமாறு பேசினார். இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வந்த நாம் அனைவரும் அரசியல் ரீதியாக இந்தியர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம். இருந்தாலும், இந்தியர்களில் பெரும்பாலோர்

அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்

அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி ஏஜென்டாகப் பணிபுரியும் ராமனுக்கு அவரின் முதலாளி சிக்கலான வழக்கு ஒன்றைச் சமாளிக்கும் பொறுப்பை தருகின்றார். அந்நிறுவனத்தின் காப்புறுதி வாடிக்கையாளர் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு காலமானார் அவரது மகனின் காப்பீடு பணத்தைக் கொடுக்குமாறு கேட்கின்றார். அவர் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்வதுமாக இருந்து வந்தது. ஒரு நாள் ராமன் அவரது வீட்டிற்குச் சென்று போலிஸ் விசாரணை முடியும் வரை காப்புறுதி இழப்பிடு தர முடியாது என்கிறார். அதனைக் கேட்டு கோபமடைந்த அவர் ராமனைத் தன்னுடைய வீட்டிலிருந்து

தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம்: ரம்யா நம்பீசன்

ஜனவரி 27, அருள்நிதி-ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து வரும் படம் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’. ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தை ஜே.எஸ்.கே.சதீஷ் உடன் லியோ விஷன்ஸ் மற்றும் செவன்ஜி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் ரம்யா நம்பீசன் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறாராம். இதுகுறித்து அவரே கூறும்போது, ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் நான் ஒரு பள்ளி ஆசிரியையாக வருகிறேன். ‘குள்ளநரிக்கூட்டம்’ படத்துக்கு பிறகு எனக்கு கிராமத்து சாயலில் ஒரு கதாபாத்திரம் அமைந்துள்ளது. இவ்வகையான நகைச்சுவை படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்டநாளாக

பறவைக் காய்ச்சல் பரவலை கட்டுபடுத்த 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழு-அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சலை எதிர்கொள்ளும் வகையில் 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முட்டை மற்றும் கோழித் தீவனம் மூலம் பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பறவைக் காய்ச்சலை எந்தச் சூழ்நிலையிலும் எதிர்கொள்ளும் வகையில் 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக் கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய தொலைபேசி எண்கள் (044-24339097, 9445032504) குறித்தும், சைதாப்பேட்டை மத்திய தோல் ஆய்வுக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு பற்றியும் அமைச்சர் ஆய்வு செய்தார்.  

உதவித் தொகையை உயர்த்த மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்த வேண்டும்; மாதாந்திர உதவித் தொகையை தாமதமின்றி ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்; உதவித்தொகை பெறுவதற்கு தடையாக உள்ள கடுமையான விதிகளை தளர்த்த வேண்டும்; அரசு வேலைவாய்ப்பில் ஊனமுற்றோர்க்கான 3 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர்,திருச்சிராப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருவிடை மருதூர் ஆகிய இடங்களில் நடைபெற்றான.  

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவப் பிரிவுகள்.

பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவப் பிரிவுகள் கட்டப்பட்டுள்ளன. அதன் துவக்க விழா செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவாண் கலந்து கொண்டு புதிய பிரிவுகளை திறந்து வைத்தார்.இதில் ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவாண் பேசுகையில், இம்மருத்துவமனையில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பில் டயாலிஸிஸ் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் மதிப்பில் முழு உடல் பரிசோதனை செய்யும் ஊவு ஸ்கேன் பிரிவும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிராமத்தினரின் மறியலால் தடுப்பணையை கிராம மக்களே அகற்றினர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளம் கிராமம் உள் ளது. இங்குள்ள குளத்திலிருந்து கீழப்பிள்ளையார்குளம் செல்லும் கால்வாயில் பொதுப்ப ணித்துறை அனுமதியின்றி சுமார் 35 அடி நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. கீழப்பிள் ளையார் குளத்திற்கு கசிவு தண்ணீர்கூட செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது. தடுப்பணையை அகற்றக் கோரி நடுப்பிள்ளையார்குளம், கீழப்பிள்ளையார்குளம் கிராம  மக்கள் சுமார் ஆயிரம் பேர் நேற்று காலை ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக  கூறி மானூர் யூனியன் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தடுப்பணை சுவரை அகற்றப்போவதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து போராட்டம்  கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து 25 அடி நீள தடுப்பணை சுவரை மேலப்பிள்ளையார்