விரைவில் குறைந்த விலை மருதுக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

விரைவில் குறைந்த விலை மருதுக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

download (17)

டிசம்பர் 9, புத்ரஜெயா: மருந்து பொருட்களின் விலை உயர்வு பெரும்பாலான மலேசிய மக்களுக்கு சுமையாக இருப்பதால் அவற்றின் விலை குறைக்க நடவடிக்கை.
மருந்துகளின் விலை இந்த ஆண்டு 50% அதிகரித்துள்ளது என்ற சண்டே ஸ்டார்ஸ் செய்திதாள் தகவல் பலரை சங்கடப்பட வைத்துள்ளது.
சுகாதார துறை அமைச்சர் தாலுக் ஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் மருந்துக்களின் விலை குறைக்கக் கூடிய ஒரு பொருள் இல்லை என்றாலும் அவற்றின் விலை குறைப்பை செயலாக்க தேசிய மருந்தக துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் அவ்ர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு கால ஊதியம் பெறுபவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
டாக்டர் சுப்ரமணியம் மலேசியாவில் சுகாதார துறைக்கு உதவி தொகை ஃபெடரல் அரசிடம் மட்டும் இருந்தே பெறப்படுகிறது. ஆனால் பல்வேறு நாடுகளுக்கு சுகாதார துறைக்கு உதவி தொகை பல்வேறு இடங்களில் இருந்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.