“உலக தமிழ் அழகி” 2018 ஜனவரி மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது

“உலக தமிழ் அழகி”  2018 ஜனவரி மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது

1

“உலக தமிழ் அழகி” மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு

 உலக தமிழ் வம்சாவளி அமைப்பு GOTO (Global Organization of Tamil Origin) அனைத்துலக தமிழ் பெண்களுக்கான அழகி போட்டி  “உலக தமிழ் அழகி”  2018 ஜனவரி மாதம் 5ம் தேதி சென்னையில் 5 நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அவ் நிகழ்விற்கான அறிமுக விழா 6.6.2017 செவ்வாய்கிழமை மாலை பேலஸ் ஆப் தி கோல்டன் ஹார்சஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அவ்விழாவில் பேரா மாநில சட்டமன்ற சபா நாயகர் தங்கேஸ்வரி மிஸ் தமிழ் யூனிவெர்ஸ் லோகோவை வெளியிட  கபாலி பட வில்லன்  டத்தோ ரோஸியம் நோர் அவர்கள் பெற்று கொண்டார் .

இவ் நிகழ்வின் நோக்கம் பற்றி உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எடிசன் விருது நிறுவனமாகிய செல்வகுமார் கூறியது, “நம் தமிழ் பெண்களிடம் அறிவு கூர்மை, கல்வி, அறிவியல், விவேகம், அழகு கலை போன்ற பல்வேறு திறமைகளை உலகுக்கு உணர்த்தும் விதமாக தமிழ் பெண்களின் தனித்துவம் உலகிற்கு அறியும் வகையில் நிகழ்வை அமைக்க உள்ளோம். இவ் நிகழ்வு ஒவ்வொரு நாட்டிலும் மாநில அளவில் அழகி போட்டி நடத்தி, தேசிய அளவில் தேர்வாகும் தமிழ் அழகிகள் உலக தமிழ் அழகியாக தேர்ந்தெடுக்க படுவார்கள். இது போன்ற நிகழ்வு உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெற்று இறுதியாக தாய் தமிழ் நாட்டில் நடைபெற உள்ளது.

இவ் நிகழ்ச்சியை மலேசியாவில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும்`பினாங்கு, பேரா, மலாக்கா போன்ற மாநிலங்களில் கிளை அமைத்து நிகழ்வு நடை பெற உள்ளது. மேலும் இதன் மூலம் தமிழ் பெண்கள் பன்னாட்டு விளம்பர நிறுவனங்களில் விளம்பர தூதராகவும், விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பும் பிரபலமாக உள்ளவர்களை தேசிய நிறுவனங்கள் உயர் பதவி வழங்கி கௌரவிக்க வழி வகிக்கும் . இதன் மூலம் தமிழ் பெண் சமுதாயம் நல்ல நிலைக்கு வரும் என மலேசியாவிற்கான மிஸ் தமிழ் யூனிவர்ஸின் ஒருங்கிணைப்பாளர் தீனா கூறினார்.

2 3 4