தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தமிழ்ப்பள்ளிக்கு இலவச பள்ளி புத்தகப் பைகள்

Online Tamil News in Malaysia

Tamil News Malaysia

ஜனவரி 05, டி.எச்.ஆர் ராகா வானொலி நிலையத்தின் #hopecouragestrength பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக சனிக்கிழமை 2-ஆம் தேதி அக்‌ஷரா உணவாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பள்ளி புத்தகப் பைகளை எடுத்து வழங்கப்பட்டது.

தனது சமுதாய கடப்பாட்டின் முயற்சியாக மக்களின் நலன் கருதி, இப்பிரச்சாரத்தின் வாயிலாக சமுதாயத்திற்குப் பயனளிக்கக்கூடிய இவ்வகையான நிகழ்ச்சிகளை அவ்வப்போது டி.எச்.ஆர் ராகா குழுவினர் ஏற்றி நடத்தி வருகின்றார். அவ்வகையில் இவ்வாண்டு ஜனவரி 4-ஆம் தேதி பள்ளியில் காலடி எடுத்து வைக்கும்வசதிக் குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இப்பிரச்சாரத்தின் வாயிலாக பள்ளி புத்தகப் பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைப் பொருட்களான புத்தகங்கள், எழுதுபொருட்களை உள்ளடக்கிய 300 பள்ளி புத்தகப் பைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பெற்றுக் கொண்டார்கள். ரிம 50 மதிப்புள்ள இந்தப் பள்ளி புத்தகப் பைகளை பொதுமக்களும் வாங்கி ஆதரவு வழங்கியுள்ளார்கள். 500-க்கும் மேற்பட்ட புத்தகப் பைகள் இப்பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்டது.

டி.எச்.ஆர் ராகா தலைவர் சுப்ராமணியம் கூறுகையில், எங்களால் முடிந்த வரை நம்முடைய சமுதாயத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்கின்றோம். அவ்வகையில் வசதிக் குறைந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இன்று இலவசமாக பள்ளி புத்தகப்பைகளை எடுத்து வழங்கியுள்ளோம். இப்பிரச்சாரம் வெற்றி அடைய செய்த டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் எங்களுக்கு என்றும் ஆதரவாக இருக்கும் இரசிகர்களுக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வகையான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே போகும் என்று அவர் கூறினார்.

இதன் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள்

எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தமிழ்ப்பள்ளியின் பெயர் பட்டியல்:

1) SJK (T) Sg Tinggi

2) SJK (T) Puchong

3) SJK (T) Kerling

4) SJK (T) Bukit Beruntung

5) SJK (T) Dominion

6) SJK (T) Glenmarie

7) SJK (T) Vivekananda

8) SJK (T) SJK (T) RRI

9) SJK (T) Effingham

10) SJK (T) Serdang

Tamil News MalaysiaOnline Tamil News in Malaysia Online Tamil News in Malaysia