அம்னோ தலைவர்கள் மீது இப்ராஹிம் அலி பாய்ச்சல்

அம்னோ தலைவர்கள் மீது இப்ராஹிம் அலி பாய்ச்சல்

ibrahim

டிசம்பர் 15, பெர்காஸா தலைவர் இப்ராஹிம் அலி, அம்னோ தலைவர்களை அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்கினார். பெர்காஸாவின் தியாகத்தை அவர்கள் மதிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், இஸ்லாஅத்தையும் மலாய்க்காரர்களையும் காக்கும் கதாநாயகன் நான் என தன்னைத்தானே வர்ணித்து கொண்டார்.

பெர்காஸாவின் 5-வது ஆண்டு மாநாட்டில் தலைமயுரை ஆற்றியபோது மேற்கண்டவாறு பேசிய அவர் அம்னோ இளைஞர் பகுதித்தலைவரும், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின், முன்னாள் துணை அமைச்சர் சபாநாயகர் சாலே கெருவாக் மத்திய பொதுக்கணக்கு கமிட்டியாளர் நூர் ஜாஸ்லான் முகமட் ஆகியோர் பெர்காஸாவை தாக்கிப் பேசியது அவசியமற்றது என்றார்.

இவர்கள் இஸ்லாத்தையும் மலாய்க் காரர்களையும் காப்பது பற்றி அக்கறை கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நான்கைந்து அம்னோ தலைவர்கள் பெர்காஸாவை தாக்கிப் பேசினர். இதன் காரணமாக அதிகமான அம்னோ அங்கத்தினர்கள் நம்முடன் சேர்ந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.