இயல்பு நிலைக்கு திருப்புகிறது பகாங், பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்கள்

இயல்பு நிலைக்கு திருப்புகிறது பகாங், பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்கள்

rain34

ஜனவரி 6, பகாங், பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்களில் வெள்ளத்தின் நிலை தற்போது சீரடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,240-லிருந்து 31,800-ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தின் நிலை இதுவரை மாற்றமடையவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் செகாமாட் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து, பகாங் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,896-லிருந்து 21,471-ஆக சரிந்துள்ளது. மேலும், பேராக்கிலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5,545-ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, வெள்ளத்தினால் கடும் பாதிப்பு அடைந்த கிளாந்தானில் 4,784 பேர் மட்டுமே தற்போது பாதுகாப்பு மையங்களில் தங்கி வருவதாக அம்மாநில சமூக நல இலாகா தெரிவித்தது.