தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நட்சத்திர விருது விழா 2014 – பத்திரிக்கையாளர் சந்திப்பு

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நட்சத்திர விருது விழா 2014 - பத்திரிக்கையாளர் சந்திப்பு

SICA1 SICA3

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்(SICA) நட்சத்திர விருது விழா 2014  பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று கோலாலம்பூர் சன்வே புத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நடசத்திர இரவு விழா வருகிற ஜனவரி 2015 இல் கோலாலம்பூரில் புக்கிட் ஜாலில் புத்ரா அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த நட்சத்திர இரவை மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம்(MISCF)  இணைந்து ஏற்பாடு செய்கிறது. 

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா அவர்கள் கலந்துகொண்டு சிறைப்புரையாற்றினார். மேலும் மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தில் தலைவர் டத்தோ T. மோகன் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்களும் நிகழ்வில்  கலந்து கொண்டனர். 

 

SICA2SICA7 SICA4 SICA6