தேசிய முன்னணியின் வெற்றிக்கு தேர்தல் இயந்திரம் அமைத்து ம.இ.கா இளைஞர் பகுதி அயராது உழைக்கும்

தேசிய முன்னணியின் வெற்றிக்கு தேர்தல் இயந்திரம் அமைத்து ம.இ.கா இளைஞர் பகுதி அயராது உழைக்கும்

Sivaraj1 (2)

ஏப்ரல் 20, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள், உட்கட்சி பூசல்கள் கடந்து இளைஞர் பகுதியினர் ஒற்றுமையோடு மாநில இளைஞர் பகுதியினரோடு இணைந்து பெர்மாத்தாங் பாவ் மற்றும் ரொம்பின் இடைத்தேர்தலில் பணியாற்ற வேண்டும் என எங்கள் தலைவர் சிவராஜ் சந்திரன் கடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டு கொண்டதற்கிணங்க இளைஞர் பகுதியினர் தேசிய முன்னணியின் வெற்றியை மனதில் நிறுத்தி தேர்தல் இயந்திரம் அமைத்து அயராது உழைப்பார்கள் என ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி செயலாளர் அர்விந்த கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்தினரின் குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு கொண்டு வர ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும். மக்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு இளைஞர் பகுதி துணைத்தலைவர் தினாளன் ராஜாகோபால் நேரிடையாக சென்று மாநில இளைஞர் பகுதியினரின் செயல்பாடுகளை கவனித்தும், ஆலோசனைகள் வழங்கியும் வருகிறார்.

ம.இ.கா இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் முதன்மைக்கட்சியாக இருப்பினும் சில பல காரணங்களாலும், முக்கியமாக கட்சியின் பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதின் அடிப்படையிலும் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்களை கவனிக்கும் பொறுப்பான நமது உரிமை பறிக்கப்பட்டு பிபிபி கட்சியில் இருக்கும் லோகபாலமோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நமது கடமையை சரியாக மேற்கொள்வதன் அடிப்படையில் எங்களது பணி தொடரும் என்றார் அவர்.

இன்று துன் மகாதீர் அவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் டத்தோ ஸ்ரீ நஜீப் அவர்களை அன்றாடம் குறை சொல்லி வருகிறார். ஆனால் நமது இந்திய சமுதாயத்தை பொறுத்தமாட்டில் பிரதமர் நஜீப் அவர்களின் தலைமையில் இந்தியர்கள் மீது அதிக்கவனம் செலுத்தப்பட்டது. தமிழ்பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது, மெட்ரிக்கிலேசன் இடங்கள் அதிகரிப்பு, இந்தியர்களை பொருளாதாரத்தில் உயர்த்த மேம்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என இவர் நமது சமுதாயத்தை நாட்டின் வளர்ச்சியில், தேசிய நீரோடையில் இணைத்தார்.

கடந்த காலங்களை விட இவருடைய தலைமையில் இந்தியர்களுக்கு நம்பிக்கை ஒளி பிறந்தது என்றே சொல்லலாம். இந்தியர்கள் அடைந்த அனுகூலங்களை இந்திய வாக்காளர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களின் வாக்கிகளை தேசியமுன்னணி பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகளையும் இளைஞர் பகுதி திறம்பட செய்யும் என அர்விந்த்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.