15 வயதுக்கு மேற்பட்டோரில் 5 மில்லியன் பேர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் – டாக்டர் சுப்ரா

15 வயதுக்கு மேற்பட்டோரில் 5 மில்லியன் பேர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் - டாக்டர் சுப்ரா

09mar11

ஜான்சன் & ஜான்சன், சன்வே குழுமம், ஏர் ஏசியா மற்றும் AIA ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நாட்டில் முதன் முதலாக  தொழிலாளிகளிடம்  புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு திட்டத்தை கடந்த 09/03/2017 அன்று துவங்கின. இந்த முயற்சியை சுகாரத்துறை அமைச்சச்ரும் ம.இ.கா தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் துவங்கிவைத்து திட்டத்தை பற்றியும் புகை பிடித்தலை குறைக்க அரசின் நடவடிக்கை பற்றியும் பேசினார்.

இத்தகைய முயற்சி நமது நாட்டில் இதுவே முதல் முறை.  பெரு வணிக நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து நாட்டின் நலனை முன்னிறுத்தி ஒரு சுகாதார செயதிட்டத்தை ஊக்க்குவிக்க ஒன்றாக இணைந்திருப்பது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.

புகை பிடித்தல் நமது நாட்டின் மிக முக்கிய பிரச்சனையாகும். மலேசியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 5 மில்லியன் பேர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். கடந்த 30 வருடங்களில் மூச்சுப் பிரச்சனைகள், இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய் போன்ற  புகை பிடித்தலால் ஏற்படக்கூடிய நோய்களே மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

சுமார் 0.8% நாட்டின் GDP புகை பிடித்தலால் ஏற்படக்கூடிய நோய்களை குணப்படுத்துவதற்கு செலவு செய்யப்படுகிறது. இறப்பு மட்டுமல்லாமல் வாழ்வின் தரமும் நாட்டின் உற்பத்தியும் வெகுவாக இதனால் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தலால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்திருந்தாலும் இது நமது செயலில் மாற்றத்தை கொண்டுவருவதில்லை. அரசு புகை பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

சுகாரத்துறை பல கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுத்தி உள்ளது. சிகரெட் மீதான வரியை 70% ஆக்கியுள்ளது. புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளை விரிவு படுத்திக் கொண்டே வருகிறோம். குளிரூட்டப்பட்ட உணவு விடுதிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறுவிக்கப்பட்டுள்ளது. விளம்பர கட்டுப்பாடுகள், பெட்டிகளில் விளம்பர கட்டுப்பாடுகள், சிகரெட் விற்பனையாளர்களுக்கு லைசன்ஸ் வழங்குதல் ஆகிய செயல்கள் மூலம் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

மக்கள்தான் மாற்றத்திற்கான மிகப் பெரிய ஊக்கிகள்.

இவ்வாறு டாக்டர் சுப்ரா நிகழ்ச்சியில் பேசினார்.

09mar8 09mar9 09mar10 09mar12 09mar13