பெங்கலான் குபேர் இடைத்தேர்தல் தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றியா?

பெங்கலான் குபேர் இடைத்தேர்தல் தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றியா?

MatRazi1

இன்று 25/09/2013 பெங்கலான் குபேரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாலை 04.00 மணி வரை 70% வாக்குப் பதிவி நடைபெற்றது. இடைத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவு நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக  தேர்தல் ஆணைய தலைவர் தன் ஸ்ரீ அப்துல் அசிஸ் முகமது யூசுப் தெரிவித்தார்.

பெங்கலான் குபேரின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாகித் ஓமர் கேன்சரால் இறந்ததை தொடர்ந்து இன்று நடைபெற்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னனியின் மட் ரஸி அட் அயில், பாஸ் கட்சியின் வான் ரோச்டி மற்றும் சுயேட்சை வேட்பாளர் இசாட் புகாரி இஸ்மாயில் புகாரி ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர். 23,929 வாக்காளர்கள் இந்த தொகுதியில் இருக்கின்றனர்.

இரவு 09 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற நிலையில் தேசிய முன்னனியின் வேட்பாளர் மட் ரஸி வெற்றி பெற்றுள்ளதாக உறுதி செய்ய்ப்படாத அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.