வயதையும் அனுபவத்தையும் வார்த்தையில் சொல்லாதீர்கள் அனுபவத்தில் காட்டுங்கள்

வயதையும் அனுபவத்தையும் வார்த்தையில் சொல்லாதீர்கள் அனுபவத்தில் காட்டுங்கள்

Sivaraj1 (1)

மார்ச் 16, தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சிவராஜ் அவர்களின் வயது தமது அனுபவம் என மார்த்தட்டிக் கொள்ளும் டத்தோ பாலா, அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் தகுந்தப்படி நடந்துக்கொண்டிருக்க வேண்டும். மேடைகளில் பேசும் போது தமது அனுபவத்தை பற்றி பேச வேண்டும், என்ன செய்தார் என்பதனை பேச வேண்டும். வருங்காலங்களில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளார் என்று சொல்ல வேண்டும். இது அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் வகிக்கும் பதவிக்கும் அழகு. அதை விடுத்து எங்கு சென்றாலும் ம.இ.கா இளைஞர் பிரிவினரை மட்டம் தட்டி பேசுவது ஒரு வயதில் மூத்தவருக்கு அழகல்ல.

ஆமாம் இளைஞர் பிரிவினரில் இருந்து இருவர் தேசியத்தலைவர் நாற்காலியில் உட்கார்ந்தார்கள். அது நிச்சயமாக தவறுத்தான், அதை மறுப்பதற்கு அல்ல சிவராஜ் அவர்கள் என்று கூறியதோடு நிற்காமல் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை மன்னிப்பும் கேட்க சொன்னார். அவர்கள் மன்னிப்பு கேட்டு தமிழ் நாளேடுகளில் வந்தது அனைவரும் அறிவர். ஆனால் பிரச்சனையை முடித்தப்பின்னும் இன்னும் அதைப்பற்றி பேசுவதே டத்தோ பாலா அவர்களின் வேலையாவிட்டது. தவறுக்கு மன்னிப்புக் கேட்டப் பிறகும் அவர் எதை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. இதுத்தான் அவரது அரசியல் அனுபவத்தை காட்டும் செயலா?

அப்படியென்றால் சகோதரர் சிவராஜ் தலைமையில் எவ்வளவோ நல்ல கரியங்களை செய்திருக்கிறோமே. அதைப்பற்றி எல்லாம் ஏன் டத்தோ பாலா அவர்கள் தனது உரையில் தெரிவிக்க மறுக்கிறார். பரந்த அனுபவசாலியான அவர், குற்றத்தை குறிப்பிட்டு பேசும் அதை நேரத்தில் செய்த நன்மையும் அல்லவா பேசவேண்டும்.

சரி, இதுநாள் வரை சிவராஜ் அவர்கள் விடுத்த சவாலுக்கு பதிலளிக்ககாமல் இருப்பது என்? பொது விவாதம் செய்ய தயாரா இல்லையா? எங்களை பிரதிநிதித்து பேச எங்களது தலைவர் தயார். எதிர்த்து வாதமிட டத்தோ பாலா தயாரா? அதை முடிவாக சொல்லுங்கள், பழனி பஞ்சாமிருத கதை வேண்டாம்.