அரசு சாரா இயக்கங்கள் மற்றும் அறங்காவல் நிறுவனங்களின் நிதி நிலையை அரசு கண்காணிக்க வேண்டும்

அரசு சாரா இயக்கங்கள் மற்றும் அறங்காவல் நிறுவனங்களின் நிதி நிலையை அரசு கண்காணிக்க வேண்டும்

Sivaraj1 (1)

கோயில்கள், தன்னார்வ, தொண்டுழியங்கள், தேவாலயங்கள், விளையாட்டு அமைப்புகள் மற்றும் அரசு சாரா பொது இயக்கங்களிக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் அதனை கண்காணிக்க வேண்டும். ஆண்டு தோறும் பொது இயக்கங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் அவை முறையாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க முறையான கட்டுப்பாடு அமைப்பு இல்லை.

மக்கள் நலனுக்காக வழங்க்ப்படும் இந்த நிதி ஒதுக்கீடு, பொறுப்புள்ள வகையிலும், வெளிப்படைத்தன்மையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு இந்த கண்காணிப்பு தேவைப்படுகிறது. பொது இயக்கங்கள் பயன் படுத்தும் நிதிக்கு முறையான கண்காணித்து கொண்டிருக்க வேண்டும் என்ற சட்டம் வலுப்படுத்த வேண்டிய அவசியன் உருவாகியுள்ளது.

அரசு சாரா இயக்கங்கள் தங்களின் நிதி பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையிலும், ஒரு காட்டுப்பட்டிற்குள் கொண்டு வரும் வகையிலும் புதிய சட்டத்திட்டத்தை சட்டத்துறை தலைவர் முன் வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நிதி பயன்பாடு தொடர்பில் மாநில மற்றும் தேசிய நிலையில் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட வேண்டும் பொது பணம் முறையாகவும் வெளிப்படையாகவும் கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இன்றைய நிலையில் பொது இயக்கங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒடுக்கீட்டுக்கான முறையான கணக்கறிக்கைகளை பொது இயக்கங்கள் வைத்திருப்பதில்லை.

மக்கள் பணம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் இப்போது அரசாங்கத்திற்கு உள்ளது. மக்கள் பணத்திற்காக முறையான கணக்கு கொண்டிருக்க வேண்டும். தனி நபர் லாபத்திற்கு அது தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, வழங்கப்பட்ட அரசாங்க நிதுக்கு கணக்காய்வாளரின் உத்திரவாதத்துடன் பொது இயக்கங்கள் கணக்கறிக்கையை சமர்ப்பிக்கப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.