நெகிரி செமிலானிலிருந்து மிதிவண்டி பயணத்தை தொடக்கிவைத்தார் தினாளன்

நெகிரி செமிலானிலிருந்து  மிதிவண்டி பயணத்தை தொடக்கிவைத்தார் தினாளன்

n1

ஆகஸ்டு 8, நமது தேசியத் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மிதிவண்டி மூலம் வலம் வந்துக் கொண்டிருக்கும் ஈப்போ வட்டாரத்தை சேர்ந்த ரகு & அவரது குழு நேற்று நெகிரிசெம்பிலான் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற ம.இ.கா இளைஞர் பிரிவின் துணைத்தலைவர் சகோதரர் தினாளன், அவர்களது பயணம் மேலும் தொடரவும் அவர்களது லட்சியத்தில் வெற்றியடையவும் உதவியும் ஊக்கமும் வழங்கினார். ‘XPDC Kayuhan Merdeka”என்று அழைக்கப்படும் இதனை ரகுவும் அவரது குடும்பமும் கடந்த 4 வருடமும் தவறாது தங்களது நாட்டு பற்றையும் தங்களது சுதந்திர தின குதுகலத்தையும் நாடு முழுக்க மிதிவண்டி மிதித்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவ்வருடமும் கடந்த திங்கள் அன்று தொடங்கிய இவர்களது பயணம் நேற்று நெகிரி செம்பிலான் வந்தடைந்தது. இவர்களது பயணத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து நெகிரி செமிலானிலிருந்து இவர்களது பயணத்தை சகோதரர் தினாளன் தொடக்கிவைத்தார். 

n2