பார்க்கின்சன் நோய்க்கான மையம் மலேசியாவில் அமையவிருக்கிறது

பார்க்கின்சன் நோய்க்கான மையம் மலேசியாவில் அமையவிருக்கிறது

diseases-injuries

டிசம்பர் 2, மலேசியாவின் முதல் பார்க்கின்சன் நோய்க்கான மையம் பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஜாலான் யுனிவர்சிட்டியில் அமையவிருக்கிறது. எதிர்வரும் 2016-ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் வகையில், அம்மையம் தென்கிழக்காசியாவிலேயே முதல் பார்க்கின்சன் நோய்க்கான மையமாகவும் திகழும்.
அம்மையம் 10 மில்லியன் ரிங்கிட் பொருட்செலவில் நிர்மாணிக்கப்படும் என மலாயாப் பல்கலைக்கழக பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது அமீன் ஜலாலுடின் தெரிவித்தார்.
இம்மையம் முழுமை பெற்றவுடன், பார்க்கின்சன் நோய்க்கான ஆய்வு மையமாகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகவும் இது திகழும் என பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது அமின் ஜலாலுடின் செப்பாட்வாவாசான் குழுமத்திற்கு 4மில்லியன் ரிங்கிட் காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்-டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் தம்பதியர் கலந்துகொண்டனர்.