அனைத்து கிளைகளும் வேற்றுமைகளை மறந்து வேட்புமனு தாக்கலில் பங்கேற்க டாக்டர் சுப்ரா அழைப்பு

அனைத்து கிளைகளும் வேற்றுமைகளை மறந்து வேட்புமனு தாக்கலில் பங்கேற்க டாக்டர் சுப்ரா அழைப்பு

IMG-20150711-WA0084

2009இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால மத்திய செயல் குழுவிற்கு சங்க பதிவு இலாக்கா(ROS) அறிவுரைத்தலின்படி  நாடு முழுவதும் நடைபெறும் ம.இ.கா கிளை அளவிலான வேட்புமனு தாக்கலின் முன்னேற்றம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று துவங்கிய வேட்புமனு மனு தாக்கல் மூன்று நாட்கள் நடைபெறும். நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவுபெறும்

இன்று நான் எனது கிளையான ம.இ.கா உஜோங் பாசிர் மலாக்கா வில் கிளை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தேன்.

மலாக்காவில் உள்ள 126 கிளைகளில் 110 கிளைகள் அதாவது 87.3 சதவீத கிளைகள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

ம.இ.கா வின் பெரும்பான்மையான கிளைகள் கட்சியின் தற்போதைய தலைமையை ஏற்று வேலை செய்கிறார்கள் என்பது நிருபனம் ஆகிறது. இதுவே நமக்கு பெரிய வெற்றியாகும்.

ம.இ.கா மலாக்கா மாநில தலைவரும், ம.இ.கா  மாநில ஆட்சி குழு உறுப்பினருமான (EXCO)  டத்தோ M.மகாதேவன் சனசி அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் என கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். டத்தோ மகாதேவன் தனது கிளையான மலாக்கா மாநில தங்கா பாத்து தொகுதியில் உள்ள பாயா ரும்பூட் கிளையின்  தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

ம.இ.கா கிளைகளும் அடிமட்ட தொண்டர்களும் கட்சியின் நலன் கருதி கட்சியிக்கு ஆதரவாக இருப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. ம.இ.கா என்ற கட்சி ஆரம்பித்து வளர இதுதான் அடிப்படையாக இருந்தது.

நேற்று கெடா மாநிலத்தில் உள்ள 334 கிளைகளில் 236 கிளைகள்(80%) வேட்புமனு தாக்கலில் பங்கு பெற்றன.

கட்சியின் செயல் தலைவர் என்ற முறையில் கட்சியின் அனைத்து மட்டத்தில் இருந்தும் எனது அணியின் தலைமைக்கு கிடத்திருக்கும் ஆதரவையும் ஒத்துழைப்பயும் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மீதமுள்ள கிளைகளும் ஒற்றுமையாக இருந்து தத்தம் கிளைகளில் வேட்புமனு தாக்கலில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் நமக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு நமது கட்சிக்காகவும் இந்திய சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் இணைவோம்.

ம.இ.கா வின் செயல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் இன்று வெளியிட்டுள்ள செய்தியாளர் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.