சுல்தானைச் சந்திக்கிறார் காலிட் இப்ராஹிம்

சுல்தானைச் சந்திக்கிறார் காலிட் இப்ராஹிம்

khalidibrahim

பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டமன்றத்திலும் பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ள சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் நாளை மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்து தமது பதவி குறித்து விவாதிப்பார்.

கடந்த ஆகஸ்டு 9-ஆம் தேதி கெஅடிலான் கட்சியிலிருந்து ஆயுட்கால உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தற்போது கிள்ளான் துறைமுக சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்கிறார்.