SICA விருதுகள் 2015 டத்தோ T.மோகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

SICA விருதுகள் 2015 டத்தோ T.மோகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

v5

தென் இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) தமிழ் தெலுங்கு, மலையாளம், கண்ணடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வருடந்தோரும் விருது வழங்கி கௌரவிக்கும். இந்த வருடம் SICA வின் வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இந்தியாவை விட்டு வெளியே ஒரு நாட்டில் அதாவது மலேசியாவில் வருகின்ற ஜனவரி 09 மற்றும் 10 2015 தேதிகளில் கோலாலம்பூரில் உள்ள ஸ்டேடியம் நெகராவில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை மலேசிய இந்திய விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம்(MISCF) மற்றும் காசிம் சின் மனிதாபிமான அறவாரியமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றன. ஸ்டேன் ஈவண்ட்ஸான் நடத்தப்படும் மலேசிய மேஜர் ஈவண்ட்ஸின் துணையோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் திரட்டப்படும் நிதியின் மூலம் மலேசியாவின் இந்திய இளைய சமூகத்தின் விளையாட்டு மற்றும் கலாச்சார திறன்களை வளர்க்க பயன்படுத்தப்படும். இந்த நிதியில் இருந்து பெரும்பங்கு மலேசியாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் வெள்ள நிவாரணத்துக்கு பயண்படுத்தப்படும்.

மேலும் இந்த விருது நிகழ்ச்சி வெளிநாட்டு கலைஞர்களுக்கு மட்டுமல்ல வளர்ந்துவரும் மலேசிய கலஞர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிகழ்வு இரண்டு நாட்களும் இரவில் வண்ணமயமான  நிகழ்ச்சிகளாக நடைபெறும். பாலிவுட் நடசத்திரங்களின் இசை இரவு ஜனவரி 09 2015 அன்றும் SICA விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனவர் 10 2015 அன்று இரவும் நடைபெறும். சிறந்த நடிகர். சிறந்த நடிகை. சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த காமெடியன். சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய பிரிவுகளின் விருதுகள் வழங்கப்படும் மற்றும் வாழ்நாள் விருதும் வழங்கப்படவிருக்கிறது

விருது நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களில் உலகின் தலைசிறந்த நடிகர் கமலஹாசன், நடிகர்கள் சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜீவா, இயக்குநர் சங்கர் ராஜா, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் அடக்கம். பாலிவுட்டில் இருந்து பல பிரபல்மான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இன்று 08/01/2015 அன்று கோலாலம்பூர் ஸ்டேடியம் நெகராவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் விருது நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு மலேசிய இந்திய விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் (MISCF) தலைவரும் SICA விருதுகள் நிகழ்ச்சி அமைப்புக் குழுவின் தலைவருமான டத்தோ T.மோகன் தலைமை தாங்கினார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் விக்ரமன், இயக்குநர் செல்வமணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

v1 v2 v3 v4