ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார்: எஸ்.சோதிநாதன்

ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார்: எஸ்.சோதிநாதன்

sothi

பிப்ரவரி 20, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார் என்றும் ஆனால் நிபந்தனை மீறப்படுமானால் நீதிமன்றம் செல்வோம் என ம.இ.கா பொது செயலாலர் எஸ்.சோதிநாதன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கப் பதிவதிகாரியின் உத்தரவுப்படி 2009 ஆம் ஆண்டு செயலவை புதிய தேர்தலை நடத்தவேண்டும் என்பதை ஒப்புகொள்கின்றோம். ஆனால் ம.இ.கா தேசிய தலைவருக்கும், மற்ற கட்சித் தலைவருக்கும் உள்ள அதிகாரங்கள் ரத்து செய்யப்படக்கூடாது எனவும் சோதிநாதன் கூறினார். ம.இ.கா அமைப்புச்சட்ட விதிகளின்படி மத்திய செயலவைக்கு 9 புதிய உறுப்பினர்களை நியமிக்கும் தலைவருக்குள்ள அதிகாரங்களும் அவற்றில் ஒன்று என அவர் தெரிவித்தார். சங்கப்பதிவதிகாரியின் கருத்துகளை நாம் எற்கவில்லை என்ற போதிலும் நாம் விட்டு கொடுத்து போக விரும்புகின்றோம். எனவே 2009 ஆம் ஆண்டின் மத்திய செயலவை புதிய தேர்தலை நடத்த ஒப்பு கொள்கிறோம் என்று கூறினார்.