மலேசியா

ம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய வளாகத்தில் ம இ கா ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நாஜிப் துன் ரசாக் கலந்து சிறப்பித்தார். ம இ கா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் மற்றும் ம இ கா பிரமுகர்கள் பிரதமரை வரவேற்றனர். இந்நாட்டில் பண்டிகை காலங்களில் நடத்தப்படும் இதுபோன்ற திறந்த இல்ல பொது உபசரிப்புகள் பல இன மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும், ஒற்றுமை உணர்வையும் மேம்படுத்த பெரிதும் உதவுவதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள்,

தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியாவின் முதன்மை நிலை தமிழ் வானொலி டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் தங்களுடைய ரசிகர்களுக்காகச் சிறப்பு படைப்புகளைக் கொண்டு வரவுள்ளது. டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம் கலைநிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017, டிஎச்ஆர் ராகாவின் “டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம்” நிகழ்ச்சியுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் முடிவுற்றது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 6-மணிக்கு அஸ்ட்ரோ வானவில் ஒளியேறவுள்ளது. டிஎச்ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களான

இவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக்  கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ

இவ்வாண்டு தீபாவளிக்கு ஆஸ்ட்ரோ சந்தாதரர்கள் பல வகையான நிகழ்ச்சிகளைத் தங்களுடைய குடும்பத்தினர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து ஆஸ்ட்ரோ கோ மற்றும் NJOI Nowஉட்பட அனைத்து திரைகளிலும் கண்டு மகிழலாம். ஆஸ்ட்ரோ வானவில்,ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி, போலிஒன் எச்.டி, தாரா எச்.டி, ஆஸ்ட்ரோ தங்கத்திரை மற்றும் டி.எச்.ஆர் ராகாவின் சமூக வளத்தளங்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் வலம் வரவுள்ளது. அண்மையில் 4 நாட்களுக்கு நடைபெற்ற அனைத்துலக இந்திய வர்த்தக விழாவின் சிறப்பு காட்சி தொகுப்புகளுடன் நடிகை ராய் லஷ்மி, பிண்ணனிப் பாடகர் சாதனா சர்கம், ஹரிணி மற்றும் நம் நாட்டின் கலைஞர்கள் கலந்து கொண்ட தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியுடன்

மலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி

மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் ஏற்பாட்டில் அக்டோபர் 07 ஆம் தேதி மாலை 07 மணியளவில் ஆக்சியாடா அரினா உள் அரங்கில் ராஜா த ஒன் மேன் என்ற இசைஞானி இளையராஜாவின் இன்னிசை மேடை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க இசைஞானியும் அவரது ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் மற்றும் மேடையில் பாடப் போகும் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களும் மலேசியா வந்தடைந்தனர். மலேசியா வந்துள்ள இளையராஜா அக்டோபர் 04 அன்று ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். நேற்று 05 அக்டோபர் 2017 மாலை இளையராஜா இசை மற்றும் மேலான்மை

“எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி

மலேசியத் தமிழர்களிடையே குறும்படங்கள் மீதான ஆர்வம் நம்ப முடியாத அளவுக்கு அதிக‌ரித்திருப்பது ஆரோக்கியமான மாறுதல் என்றே கூறலாம். தமிழில் தயாராகும் குறும்படங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் பெற்று வருவது பெருமைக்குறியது ஒன்றாகும். திரைப்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில் பல குறும்படப் போட்டிகளை நடத்திவருகிறது. வெற்றிகரமாக நடந்து முடிந்த மகளிர் மட்டும் குறும்படம் போட்டியைத் தொடர்ந்து இம்முறை குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் “எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஒரு குறும்படப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. போட்டி விபரங்கள் : போட்டி தவணை 03 அக்டோபர் 2017 தொடங்கி

SD புவனேந்திரனின் ஆசான் திரைப்படம் நவம்பர் 30 திரைக்கு வருகிறது

டத்தோ N.K.சுந்தரம் வழங்கும் ஹரிதாஸ் மிரட்டும் SD புவனேந்திரனின் “ஆசான்” திரைப்படம் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் 30ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. SD புவனேந்திரனின் முந்தைய படைப்பான  மறவன் போலவே இந்த ஆசான் திரைப்படமும் மலேசியாவில் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிதப் பேராசிரியர் ஒருவர் தன் மகளை காப்பாற்ற நடத்தும்  போராட்டமே ஆசான் திரைப்படத்தின் ஒன் லைனர் என திரைப்படக் குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். ஆசான் குழுவிற்கு நல்வாழ்த்துக்கள். இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னரே என் தமிழ் தனது முகப் புத்தக பக்கத்தில் அறிவித்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

செக்சன் 17லில் ம இ கா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் புதிய அலுவலகத்தை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்

பெட்டாலிங் ஜெயா, செக்சன் 17லில் ம இ கா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் புதிய அலுவலகத்தை  ம.இ.கா வின் தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று 01/10/2017 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலை ம இ கா பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ம இ கா ஐவரின் பெயரை சமர்ப்பித்துள்ளது. தேசிய முன்னணியின் தலைவர் என்ற வகையில் பிரதமர்,  வேட்பாளரை தேர்வுச் செய்வார் என அவர் அப்போது தெரிவித்தார். பிரதமரின் வேட்பாளர் தேர்வு லஞ்ச ஒழிப்பு ஆணைய

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா மற்றும் டத்தோஸ்ரீ SK தேவமணி கலந்துகொண்ட பக்தி சக்தியின்  சூரசம்ஹாரம் மாணவர்களுக்கான கருத்தரங்கம்

இன்று 01/10/2017 அன்று மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள லிம் கோ தோங் மண்டபத்தில் பக்தி சக்தி ஏற்பாட்டில் “சூரசம்ஹாரம்” என்ற இந்திய மாணவர்களுக்கென சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பெற்றோருக்கான எழுச்சியுரை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு கருத்தரங்கை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் ம.இ.கா வின் தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையேற்று துவக்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். மத்திய பிரதம மந்திரி அமைச்சகத்தின் துணை அமைச்சரும் ம.இ.காவின் தேசிய துணை தலைவருமான டத்தோஸ்ரீ SK தேவமணி அவர்கள் ஏற்பாடு செய்து கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப் படுத்தி

டத்தோஸ்ரீ SK தேவமணி தலைமையில் இடைநிலைப்பள்ளியை நோக்கி செல்லும் கருத்தரங்கம்

பினாங்கு மாநில தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை ஏற்பாட்டில் 30 செப்டம்பர் பினாங்கு அறிவியல் பல்கலைகழக வளாகத்தில் இடைநிலைப்பள்ளியை நோக்கி செல்லும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரதம மந்திரி அமைச்சகத்தின் துணை அமைச்சரும், எரிசக்தி பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர் மேலாண்மை அமைச்சகத்தின் துணை அமைச்சரும் ம.இ.காவின் துணை தலைவருமான டத்தோஸ்ரீ SK தேவமணி தலைமை ஏற்று கலந்து கொண்ட மாணவர்களுக்கு தனது அறிவுரைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

என் வீட்டுத் தோட்டத்தின் வெற்றி - புதிய கதை களம் புதிய விளம்பர யுக்தி திரைப்படக் குழுவினரின்  உழைப்பு ஈடுபாடு

மலேசியா முழுதும் இன்று எல்லோரும் பேசும் ஒரே விஷயம் என் வீட்டுத் தோட்டத்தில் மலேசிய தமிழ்த் திரைப்படம் பற்றித்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மலேசிய தமிழ் இணையவாசிகள் அனைவரும் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது பேஸ்புக்கையும் வாட்சப்பையும் இன்ஸ்டாக்ராமையும்  உலா வருகையில் புரிகிறது. நாட்டில் உள்ள அனைத்து திரையுலக பிரபலங்களும் புதிதாக திரைத்துறைக்கு வந்தவர்களும் வரும் ஆர்வம் உள்ளவர்களும் என அனைவரும் என் வீட்டுத் தோட்டத்தில் திரைப்படத்தை மிகவும் சிலாகித்து பாராட்டுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் படத்தில் ஒவ்வொன்று பிடித்திருக்கிறது. சிலருக்கு பல விஷயங்கள் பிடித்திருக்கிறது. ஆனால் எல்லோரும் சொல்லும் விஷயம் பயம் என்பதுதான். அனைவரையும் படம்