MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

mh17

ஜனவரி 29, மாயமான மலேசிய விமானம் MH 370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH. 370 மாயமானது. 239 பேருடன் சென்ற விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் உலகமே குழம்பியது. இந்நிலையில் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது. இதையடுத்து விமானத்தை ஆஸ்திரேலியா தலைமையில் பல்வேறு நாடுகள் மாதக் கணக்கில் தேடி வருகின்றன.

சந்தேகம் நீர் மூழ்கி கப்பல் மூலமும் தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இதனால் விமானம் கடலில் தான் விழுந்ததா அதுவும் தேடப்படும் இடத்தில் தான் விழுந்ததா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விமானம் எங்கோ உள்ளதாகவும், அது எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் வேறு கூறப்படுகிறது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம்MH370 விபத்தில் சிக்கியது என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் யாருமில்லை என்றும் தெரிவித்துள்ளது. 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளது