சிம்பாங் அம்பாட் அருகே மனித உடல் உறுப்புகளான கை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

சிம்பாங் அம்பாட் அருகே மனித உடல் உறுப்புகளான கை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

hand

டிசம்பர் 1, நிபோங் தெபால் சிம்பாங் அம்பாட் அருகே இருக்கும் தொழிற்சாலை பகுதியில், மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மனித உடல் உறுப்புகளான கைகள் மற்றும் கால், அப்பகுதியில் இருந்த கால்வாயில் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த மக்கள் அதனை உடனுக்குடன் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் கைகள் மற்றும் கால் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் போலீசாரால் எடுக்கப்பட்ட மனிதரின் வலது கால் சம்பவம் தொடர்புடையதாக இருக்கலாம் என மாநில குற்றப் பிரிவு தலைமை அதிகாரி கமிஷனர் மஸ்லான் கெசா தெரிவித்தார்.
தொடர்ந்து, அனைத்து மனித உடல் உறுப்புகளும் விசாரணைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி வருகின்றனர்.