MH370 விமானத்தின் மேலும் சில பாகம் கண்டுபிடிப்பு

MH370 விமானத்தின் மேலும் சில பாகம் கண்டுபிடிப்பு

mh-370

ஆகஸ்டு 18, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது.

சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என அந்நாட்டு பிரதமரும் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவில் இரு பாகங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாகம் காணாமல் போன MH370 விமானத்தினுடையது தானா என்பதை நிபுணர்கள் உறுதி செய்வார்கள் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.