மாநிலம் தொடர்புக் குழு: புதிய நியமனங்களை இன்று அறிவித்தார் டத்தோ ஜி. பழனிவேல்

மாநிலம் தொடர்புக் குழு: புதிய நியமனங்களை இன்று அறிவித்தார் டத்தோ ஜி. பழனிவேல்

Palanivel

ஜனவரி 27, மாநிலம் தொடர்புக் குழுக்களில் உள்ள பல முக்கிய பதவிகளுக்கு புதிய நியமனங்களை இன்று அறிவித்தார் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி. பழனிவேல். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் அறிவித்தவாறு ம.இ.காவில் மாற்றங்கள் செய்யப்படுள்ளது.

டான் ஸ்ரீ ராமசாமி முத்துசாமி பேராக் மாநில தொடர்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நெகிரி செம்பிலான் மாநிலச் தொடர்பு ஆலோசனைக் குழு தலைவராக இருந்த டத்தோ S. சோதிநாதன் பதில் திரு. டத்தோ கணேசன் ஆறுமுகம் அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டத்தோ S. சோதிநாதன் தேசிய அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனது பதவியை  பெருந்தன்மையுடன் துறப்பதற்கு உடன்பட்டனர்.
கூட்டரசு பிரதேசம் மாநில தொடர்பு ஆலோசனைக் குழு தலைவராக இருந்த டத்தோ M.சரவணனுக்கு பதிலாக டத்தோ ராஜு வீரபெருமாள் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டத்தோ ராஜு வீரபெருமாள் வகித்த கூட்டரசு பிரதேசம் மாநில தொடர்பு ஆலோசனைக் குழு துணைத் தலைவராக திரு. நெடுஞ்செழியன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு ஜேக்கப் சாமுவேல் புதிய சிலாங்கூர் மாநில தொடர்பு ஆலோசனைக் குழு செயலாளராக அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அந்தந்த மாநில தொடர்புக் குழுக்களில் மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களை அந்தந்த மாநில தொடர்புக் குழு தலைவர்கள் மூலம் அறிவிக்கப்படும். என்று டத்தோ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.