ரோஹிங்யாவின் துன்பத்தை போக்குவது நமது கடமை

ரோஹிங்யாவின் துன்பத்தை போக்குவது நமது கடமை

logo

மே 19, ரோஹிங்யா மக்கள் எதிர்நோக்கும் துன்பத்தைப் போக்குவது நமது கடமையாகும். அதனை தட்டிக் கழித்து இன்னொரு நாடு பார்த்துக் கொள்ளட்டும் என்று தள்ளிவிட முடியாது. பிற நாடுகள் மீண்டும் இப்பிரச்சனையை நம் பக்கம் தள்ளிவிட கூடும். ஒரு நாடு பொறுப்பேற்று அவர்களின் துயர்த் துடைக்கும் வரை பந்துப்போல் அம்மக்கள் நாடுகள் தோரும் உதைக்கப்படும் பந்துப்போல உழன்று வருவார்கள்.

ஏன் அவர்களின் துன்பத்திற்கு மலேசியா ஆதரவு வழங்கி பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடாது?? அப்படி நாம் அவர்களுக்கு உதவ தயாரானால். உலகளாவிய நிலையிலிருந்து நம்முடன் கைக்கோர்த்து உதவிட பல இயங்கங்கள் முன் வரும். அதுமட்டுமின்றி, இப்பிரச்சனை ஒரு தற்காலிக பிரச்சனையே அன்றி நிரந்தர பிரச்சனை அல்ல.

மியான்மார் அரசாங்கம் பொறுப்பேற்கும் என காத்திருத்தல் வீண். காரணம் சொந்த நாட்டிலே குடியுரிமை மறுக்கப்பட்டு இந்நிலைமைக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.

மலேசியாவில் தங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எண்ணித்தான் அம்மக்கள் நம்மை சரணடைந்துள்ளனர். இதற்காக படு பயங்கரமான கடல் வழி பயணத்தை அவர்கள் மேற்க்கொண்டுள்ளனர். இதில் பலர் உயிர் இழந்துள்ளனர், பலர் கடத்தப்பட்டுள்ளனர், இன்னும் பலர் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். அதை எல்லாம் கடந்து ஏன் இவர்கள் நமது என்லைக்கு வரவேண்டும்.