நவீன வசதிகளுடன் ஆம்புலன்சுகள் ஒப்படைக்கப்பட்டன – டாக்டர் சுப்ரா வழங்கினார்

நவீன வசதிகளுடன் ஆம்புலன்சுகள் ஒப்படைக்கப்பட்டன - டாக்டர் சுப்ரா வழங்கினார்

07august_subra_7

தாம் சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் மருத்துவத் தறையின் சேவைத் தரத்தை உயர்தும் முயற்சியாக மேற்கொண்டுவரும் உருமாற்றுத் திட்டங்கள் எதிர்ப்பார்த்தப் பலனை அளித்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்

தாம் அறிமுகப்படுத்திய 10 முக்கிய உருமாற்றுத் திட்டங்களில் எட்டு மக்களுக்கு அதிகப் பலனை அளித்து வருகிறது. அதில் குறிப்பாக, ஒரு நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் முன் வழங்கும் சிறப்புச் சிகிச்சைப் பிரிவும், தரம் உயர்த்தப்பட்ட அம்புலன்ஸ்களும் அடங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

சிலாங்கூர், ஷா ஆலம் மருத்துவமனையில் இன்று தரம் உயர்தப்பட்ட அம்புலன்ஸ்கள் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது டத்தோஸ்ரீ இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் தரம் உயர்த்தப்பட்ட 500 அம்புலன்ஸ்களைக் கொள்முதல் செய்துள்ளது. அதில் முதல் கட்டமாக 200 அம்புலன்ஸ்கள் பெறப்பட்டுள்ளன. எஞ்சியவை கட்டங் கட்டமாக இதர மருத்துவமனைகளுக்கு ஒப்படைக்கப்படும் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் மேலும் கூறினார்.

பின்னர், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், புத்ராஜாயா ஆகிய இடங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கும் அம்புலன்ஸ்களை ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில், சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷ்ஷாம் அப்துல்லா, சுகாதார அமைச்சின் துணைத் தலைமை இயக்குநர் டத்தோ ஷப்பி அப்துல்லா (நிதி நிர்வாகம்), சிலாங்கூர் மாநில சுகாதார துறையின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஹஜ்ஜா ஷய்லான், ஷா ஆலம் மருத்துவமனையின் இயக்குநர் டத்தின் படுக்கா டாக்டர் ஹஸ்னி ஹனாபி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

07august_subra_1 07august_subra_2 07august_subra_3 07august_subra_4 07august_subra_5 07august_subra_6 07august_subra_8 07august_subra_9 07august_subra_10 07august_subra_11 07august_subra_12