அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்

அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்

image33image17image16image13

அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்

மிகப் பெரிய காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி ஏஜென்டாகப் பணிபுரியும் ராமனுக்கு அவரின் முதலாளி சிக்கலான வழக்கு ஒன்றைச் சமாளிக்கும் பொறுப்பை தருகின்றார். அந்நிறுவனத்தின் காப்புறுதி வாடிக்கையாளர் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு காலமானார் அவரது மகனின் காப்பீடு பணத்தைக் கொடுக்குமாறு கேட்கின்றார். அவர் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்வதுமாக இருந்து வந்தது.
ஒரு நாள் ராமன் அவரது வீட்டிற்குச் சென்று போலிஸ் விசாரணை முடியும் வரை காப்புறுதி இழப்பிடு தர முடியாது என்கிறார். அதனைக் கேட்டு கோபமடைந்த அவர் ராமனைத் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே அனுப்புகின்றார். பிறகு, ராமன் இந்த வழக்குக் குறித்து ஆழமாக விசாரிக்க தொடங்கின்றார். அப்பொழுது எதிர்பாராத திருப்பங்களைக் கண்டு பிடிக்கின்றார்.
இத்தொலைக்காட்சிப் படத்தில் நமக்கு நன்கு அறிமுகமான நடிகை ஜாஸ்மின் மைக்கேல் முதல் முறையாக ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தை ஏற்றி நடித்துள்ளார். இவருடன் லிங்கேஸ், பால கணபதி, கிர்த்திகா ஆகியோர் நடித்துள்ளனர். நம் நாட்டின் புகழ்பெற்ற இயக்குனர் வி.நாகராஜ் இத்தொலைக்காட்சிப் படத்தை இயக்கியுள்ளார்.

ஆகவே, வெள்ளிக்கிழமை 14-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தேடல்கள் தொலைக்காட்சிப் படத்தை அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் காணத்தவறாதீர்கள்.

image26image14